ICC Champions Tropy 2025: அடுத்த மாதம் 19ஆம் தேதி சாம்பியன்ஸ் டிராபி தொடங்கி நடைபெற உள்ளது. மார்ச் 9ஆம் தேதி வரை நடைபெறும் இத்தொடர் பாகிஸ்தானில் நடைபெறுகிறது. இந்தியாவுக்கான போட்டிகள் மட்டும் துபாயில் நடைபெறும். இதில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான் அணிகள் குருப் பி-யில் பாகிஸ்தான், இந்தியா, வங்கதேசம் மற்றும் நியூசிலாந்து அணிகள் குருப் ஏ-வில் இடம் பெற்றிருக்கின்றன.
இந்த நிலையில், இத்தொடருக்கான அணியை ஒவ்வொரு நாடும் அறிவித்து வருகிறது. ஏற்கனவே நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான், வங்கதேசம் அணிகள் அறிவிக்கப்பட்ட நிலையில், இன்று(ஜன.13) ஆஸ்திரேலியா அணி 15 வீரர்கள் கொண்ட அணியை அறிவித்துள்ளது.
பேட் கம்மின்ஸ் தலைமையில் ஆஸ்திரேலியா
இன்று(ஜன.13) அறிவிக்கப்பட்ட அணியில் பேட் கம்மின்ஸ் கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார். பார்டர் கவாஸ்கர் தொடரில் காயம் காரணமாக விலகிய வேகப் பந்து வீச்சாளர் ஜோஷ் ஹேசில்வுட் இதில் இடம் பெற்றுள்ளார்.
ஜோஷ் ஹெசல்வுட் காயத்தில் இருந்து மீண்டு வருகிறார். அதேபோல் கம்மின்ஸுக்கு கணுக்காலில் ஏற்பட்ட காயம் குறித்து ஸ்கேன் எடுக்க உள்ளார். இவர்கள் இலங்கை சுற்றுப்பயணத்திலிருந்து ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
வேகப்பந்து வீச்சாளர்களாக மிட்செல் ஸ்டார்க் மற்றும் நாதன் எல்லிஸ் தேர்வாகியுள்ள நிலையில், ஆடம் ஜாம்பா முன்னணி சுழற்பந்து வீச்சாளராக ஆடம் ஜாம்பா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ஆல்ரவுண்டர்களாக ஆரோன் ஹார்டி மற்றும் மேத்யூ ஷார்ட் மற்றும் மார்க்கஸ் ஸ்டோய்னிஸ் இடம் பெற்றுள்ளனர். அதே நேரத்தில் விக்கெட் கீப்பர் அலெக்ஸ் கேரிக்கு அடுத்த தேர்வாக ஜோஷ் இங்கிலிஸ் தேர்வாகியுள்ளார்.
மேலும் படிங்க: லாஸ் ஏஞ்சல்ஸ் காட்டுத்தீ விபத்து.. பலி எண்ணிக்கை 24ஆக உயர்வு
சாம்பியன்ஸ் டிராபிக்கான ஆஸ்திரேலியா அணி
பேட் கம்மின்ஸ் (கேப்டன்), அலெக்ஸ் கேரி(விகீ), நாதன் எல்லிஸ், ஆரோன் ஹார்டி, ஜோஷ் ஹேசில்வுட், டிராவிஸ் ஹெட், ஜோஷ் இங்கிலிஸ், மார்னஸ் லாபுசாக்னே, மிட்செல் மார்ஷ், க்ளென் மேக்ஸ்வெல், மேத்யூ ஷார்ட், ஸ்டீவ் ஸ்மித், மிட்செல் ஸ்டார்க், மார்க்கஸ் ஸ்டோய்னிஸ், ஆடம் ஜாம்பா.
ஆஸ்திரேலியா அணி குறித்து ஜார்ஜ் பெய்லி
சாம்பியன்ஸ் டிராபிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அணி மிகவும் அனுபவம் வாய்ந்தது. 2023 ஒருநாள் உலகக் கோப்பை, கடந்த ஆண்டு இங்கிலாந்தில் வெற்றிகரமான சுற்றுப்பயணம் மற்றும் சமீபத்தில் பாகிஸ்தான் உள்நாட்டுத் தொடர் ஆகியவற்றில் சிறப்பாகப் பங்களித்துள்ளது. மேலும், இந்த அணி பாகிஸ்தான் சூழலுக்கு ஏற்ப தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார்.
ஏற்கனவே அறிவிக்கப்பட்ட அணிகள்
ஆப்கானிஸ்தான் அணி: ஹஷ்மத்துல்லா ஷாஹிடி (கேப்டன்), ரஹ்மத் ஷா (துணை கேப்டன்), ரஹ்மானுல்லா குர்பாஸ் (விகீ), இக்ராம் அலிகில் (விகீ), இப்ராஹிம் சத்ரான், செடிகுல்லா அடல், அஸ்மத்துல்லா உமர்சாய், முகமது நபி, குல்பாடின் நயிப், ரஷீத் கான்ஃபர், , ஃபசல்ஹக் ஃபரூக்கி, நவீத் சத்ரான் மற்றும் ஃபரித் அகமது மாலிக்.
வங்கதேசம் அணி: நஜ்முல் ஹொசைன் (கேப்டன்), தன்சித் ஹசன் தமீம், சௌமியா சர்க்கார், பர்வேஸ் ஹொசைன் எமன், முஷ்பிகுர் ரஹீம், தவ்ஹித் ஹ்ரிடோய், மஹ்முதுல்லா, மெஹிதி ஹசன், ஜேக்கர் அலி அனிக், ரிஷாத் ஹொசைன், நசும் அஹ்மத், தஞ்சிம் ஹஸன் அகிஜ் ரஹ்மான்.
நியூசிலாந்து அணி: மிட்செல் சாண்ட்னர் (கேப்டன்), மைக்கேல் பிரேஸ்வெல், மார்க் சாப்மேன், டெவன் கான்வே, லாக்கி பெர்குசன், மேட் ஹென்றி, டாம் லாதம், டேரில் மிட்செல், வில் ஓ’ரூர்க், க்ளென் பிலிப்ஸ், ராச்சின் ரவீந்திரா, பென் சியர்ஸ், நாதன் ஸ்மித், கேன் வில்லியம்சன், வில் யங்.
மேலும் படிங்க: இந்தியாவின் மிக நீண்ட ரயில் பயணம்….4234 கி.மீ. தூரம்… 3 நாட்கள்… 9 மாநிலங்கள்