ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி: ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு

மும்பை,

8 அணிகள் கலந்து கொள்ளும் சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் அடுத்த மாதம் 19-ந் தேதி தொடங்கி மார்ச் 9-ந் தேதி வரை நடக்கிறது. இந்த தொடருக்கான அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. அதன்படி குரூப் ஏ-வில் இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, வங்காளதேசம் அணிகளும், குரூப் பி-யில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான் அணிகளும் இடம் பிடித்துள்ளன. ஒவ்வொரு பிரிவிலும் உள்ள அணிகள் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும்.

பிப்ரவரி 19-ந்தேதி கராச்சியில் தொடங்கும் முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் பாகிஸ்தான் அணி, நியூசிலாந்தை சந்திக்கிறது. இதில் இந்திய அணிக்குரிய ஆட்டங்களும் , முதலாவது அரையிறுதியும் துபாயில் நடைபெற உள்ளன. பாதுகாப்பு அச்சுறுத்தலால் இந்திய அணி பாகிஸ்தானுக்கு செல்ல மறுத்ததால் இந்திய அணிக்குரிய ஆட்டங்கள் மட்டும் துபாய்க்கு மாற்றப்பட்டுள்ளது.

இந்த தொடரில் பங்கேற்கும் வீரர்கள் அடங்கிய பட்டியலை ஒவ்வொரு நாடுகளும் அறிவித்து வருகின்றன. இந்த நிலையில், சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான ஆஸ்திரேலிய அணி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. பேட் கம்மின்ஸ் தலைமையிலான 15 பேர் அடங்கிய பட்டியலை ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ளது.

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபிக்கான ஆஸ்திரேலிய அணி விபரம்;

பேட் கம்மின்ஸ் (கேப்டன்), அலெக்ஸ் கேரி, நாதன் எல்லிஸ், ஆரோன் ஹார்டி, ஜோஷ் ஹேசில்வுட், டிராவிஸ் ஹெட், ஜோஸ் இங்லிஷ், மார்னஸ் லபுசேன், மிட்சேல் மார்ஷ், க்ளென் மேக்ஸ்வெல், மேத்தீவ் ஷார்ட், ஸ்டீவ் ஸ்மித், மிட்சேல் ஸ்டார்க், மார்கஸ் ஸ்டோய்னிஸ் மற்றும் ஆடம் ஜாம்பா.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.