சத்தீஸ்கரில் நடைபெற்ற என்கவுன்ட்டரில் மாவோயிஸ்ட்கள் 3 பேர் உயிரிழப்பு: நடந்தது என்ன?

புதுடெல்லி: சத்​தீஸ்கர் மாநிலத்​தில் போலீ​ஸார் நடத்திய என்க​வுன்ட்​டரில் மாவோ​யிஸ்ட்கள் 3 பேர் உயிரிழந்​தனர். ஏராளமான ஆயுதங்​கள், வெடிபொருட்கள் கைப்​பற்​றப்​பட்​டுள்ளன.

சத்தீஸ்கர் மாநிலம் பிஜப்​பூர் மாவட்​டத்​தில் தேசிய பூங்கா​வுக்கு உட்பட்ட அடர்ந்த வனப் பகுதி​யில் கடந்த சனிக்​கிழமை மாவோ​யிஸ்ட்கள் மறைத்து வைத்​திருந்த வெடிபொருள் வெடித்து சிதறியது. அங்கு ரோந்து பணியில் ஈடுபட்​டிருந்த சிஆர்​பிஎப் படை வீரர் ஒருவர் அதில் சிக்கி படுகாயம் அடைந்​தார். அவர் பிஜப்​பூர் மாவட்ட அரசு மருத்​துவ​மனை​யில் சிகிச்சை பெற்று வருகிறார். இதையடுத்து சிஆர்​பிஎப் வீரர்கள் அந்த இடத்​தில் நேற்று தீவிர தேடுதல் வேட்டை நடத்​தினர். அப்போது மறைந்​திருந்த மாவோ​யிஸ்ட்​கள், வீரர்களை நோக்கி துப்​பாக்​கிச் சூடு நடத்​தினர்.

உஷாரடைந்த சிஆர்​பிஎப் வீரர்கள் பதில் தாக்​குதல் நடத்​தினர். இதில் மாவோ​யிஸ்ட்கள் 3 பேர் உயிரிழந்​தனர். அவர்​களது உடல்கள் மீட்​கப்​பட்​டுள்ளன. அந்தப் பகுதி​யில் இருந்து தானி​யங்கி துப்​பாக்​கி​கள், அதிநவீன ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் ஏராளமாக கைப்​பற்​றப்​பட்டன. இறந்​தவர்​களின் உடல்களை அடையாளம் காணும் பணி நடைபெற்று வருவதாக சிஆர்​பிஎப் அதிகாரிகள் தெரி​வித்​துள்ளனர்.

முன்னதாக கடந்த வியாழக்​கிழமை சுக்மா – பிஜப்​பூர் எல்லை​யில் மாவோ​யிஸ்ட்கள் வைத்த கண்ணிவெடிகள் வெடித்து 8 வீரர்கள் உயிரிழந்​தனர். அதற்கு பதிலடி கொடுக்​கும் வகையில் பாது​காப்புப் படை வீரர்கள் தீவிர தேடுதல் வேட்டை நடத்​தினர். அப்போது நடந்த என்க​வுன்ட்​டரில் 3 மாவோ​யிஸ்ட்கள் சுட்டுக் ​கொல்​லப்​பட்​டனர். அவர்​களிடம் இருந்​தும் ஏராள​மான ஆ​யுதங்​கள்​ கைப்​பற்​றப்​பட்​டது குறிப்​பிட்​தக்​கது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.