சென்னை: முதல்வர் திறனாய்வு தேர்வு எழுதவுள்ள பள்ளி மாணவர்களுக்கான ஹால்டிக்கெட்கள் ஜனவரி 20-ம் தேதி வெளியிடப்பட உள்ளதாக தேர்வுத்துறை அறிவித்துள்ளது. அரசுப் பள்ளிகளில் 2024-25ம் கல்வி ஆண்டில் 10ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கான தமிழ்நாடு முதலமைச்சரின் திறனாய்வுத் தேர்வு அடுத்த ஆண்டு ஜன.,25ம் தேதி நடக்க உள்ளது. 2024-25 கல்வி ஆண்டில் படிக்கும் 10ம் வகுப்பு மாணவர்கள் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் இத்தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. அதன்படி, இந்த தேர்வுக்கான ஹால் டிக்கெட் ஜனவரி 20ந்தேதி முதல் இணையத்தில் […]