சென்னை அரசியல் தலைவர்கல் பொங்கல் பண்டிகைக்காக தமிழக மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர் பொங்கலை முன்னிட்டு மக்களுக்கு தமிழக அரசியல் தலைவர்களும் தங்களது வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பொங்கல் தமிழரின் தனிப்பெரும் திருநாள்! நம் பண்பாட்டுப் படைக்கலன்! உழைப்பையும் உழவையும் இயற்கையையும் போற்றும் மதச்சார்பற்ற சமத்துவப் பெருநாள். நம் மீது முழுமையான நம்பிக்கை வைத்துள்ள மக்களுக்கு நாம் என்றும் உண்மையாக இருந்து உழைத்திடுவோம். தமிழர்களின் தனித்துவமான பண்பாட்டு ஆயுதமாகத் தமிழர் திருநாள் எனும் பொங்கல் திருநாளைக் […]