"சாம்பியன்ஸ் டிராபில் தேர்வானாலே போது" – ஸ்ரேயாஸ் ஐயர்

Shreyas Iyer About Champions Trophy: கிரிக்கெட் ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்படும் சாம்பியன்ஸ் டிராபி அடுத்த மாதம் 19ஆம் தேதி தொடங்குகிறது. பாகிஸ்தானில் வைத்து நடைபெறும் இத்தொடரில் இந்தியாவுக்கான போட்டிகள் மட்டும் துபாயில் வைத்து நடைபெறுகிறது.

இதில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான் அணிகள் குருப் பி-யில் பாகிஸ்தான், இந்தியா, வங்கதேசம் மற்றும் நியூசிலாந்து அணிகள் குருப் ஏ-வில் இடம் பெற்றிருக்கின்றன. இதற்கான அணிகளை ஒவ்வொரு நாடும் அறிவித்து வரும் நிலையில், இந்திய அணி எப்போது அறிவிக்கும் என ரசிகர்கள் காத்துக்கொண்டிருக்கின்றனர். 

ஆனால் அணி தேர்வில் ஏகப்பட்ட குழப்பங்கள் உள்ளன. ரிஷப் பண்டிற்குப் பதிலாக சஞ்சு சாம்சனையும் ஜடேஜாவிற்கு பதிலாக அக்சர் பட்டேலையும் தேர்ந்தெடுக்க வாய்ப்புள்ளதாக விவாதங்கள் ஏற்படும் பட்சத்தில் 8 ஆண்டுகள் கழித்து நடைபெறும் சாம்பியன்ஸ் டிராபில் ஸ்ரேயாஸ் ஐயர் இடம் பெறுவாரா என்றும் கேள்விகள் எழுந்துள்ளன. 

மேலும் படிங்க: லாஸ் ஏஞ்சல்ஸ் காட்டுத்தீ விபத்து.. பலி எண்ணிக்கை 24ஆக உயர்வு

பல கோப்பைகளை வென்ற ஸ்ரேயாஸ்

கடந்த ஆண்டு ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையில் கே.கே.ஆர் அணி ஐபிஎல் கோப்பையை வென்றது. அதனைத் தொடர்ந்து ரஞ்சி கோப்பை, சையது முஷ்டாக் அலி கோப்பையையும் அவரது தலைமையில் வென்றார். அதேபோல் இரானி கோப்பையை ஒரு வீரராக வென்றிருந்தார். மேலும், ஐபிஎல் ஏலத்தில் அவர் 26 .75 கோடி ரூபாய்க்கு பஞ்சாப் அணியால் வாங்கப்பட்டார். இருப்பினும் அவர் எதிர் வரும் இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடருக்குத் தேர்வாகவில்லை. 

இந்த சூழலில் தான் சாம்பியன்ஸ் டிராபிக்கு தேர்வாரா என்ற கேள்விகள் எழுந்துள்ளன. காரணம், முழங்காலில் அறுவை சிகிச்சை செய்து கொண்டதால் எறத்தாழ ஒரு வருடம் சர்வதேச போட்டிகளை ஆடாத முகமது ஷமியை சாம்பியன்ஸ் டிராபிக்கு தயார் செய்யும் வகையில் இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் சேர்க்கப்பட்டிருக்கிறார். ஆனால் உலக கோப்பையில் அதிக ரன்கள் அடித்து அதோடு இத்தனை கோப்பைகளை வென்ற ஸ்ரேயாஸ் ஐயர் சேர்க்கப்படவில்லை. 

இந்த நிலையில் தான், சாம்பியன்ஸ் டிராபிக்கு தேர்வாகினால் பெருமையாகக் கருதுகிறேன் என ஸ்ரேயாஸ் ஐயர் தெரிவித்துள்ளார். 

சாம்பியன்ஸ் டிராபில் இடம் பெற்றாலே போதும்

ESPN Cricinfo-வில் பேசிய ஸ்ரேயாஸ் ஐயர், “எந்த இடத்திலும் பேட்டிங் செய்ய தயாராக இருக்கிறேன். நானும் கே.எல் ராகுலும் ஒருநாள் உலக கோப்பையில் முக்கியமான பங்களிப்பை அளித்தோம். அந்த சீசன் எங்களுக்கு சிறப்பாக அமைந்தது. இருப்பினும் இறுதி போட்டியில் நாங்கள் நினைத்ததைச் செய்யமுடியாமல் போனது. எனவே சாம்பியன்ஸ் டிராபில் தேர்வானால் அதனைப் பெருமையாக கருதுகிறேன்” எனத் தெரிவித்தார்.

மேலும் படிங்க: ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி.. கம்மின்ஸ் கேப்டனா? ஆஸ்திரேலியா அணி அறிவிப்பு!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.