Reliance Jio… ரூ. 448 ரீசார்ஜில்… தினம் 2GB டேட்டா உடன் … 12 OTT சேனல்கள்

ரிலையன்ஸ் ஜியோ நாட்டின் பிரபலமான தொலைத்தொடர்பு நிறுவனமாகும். ஜியோ நாடு முழுவதும் அதன் சிறந்த நெட்வொர்க் வசது மற்றும் இணைய வசதியை வழங்கும் நிறுவனம் என பெயர் பெற்றது. ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தனது பல்வேறு பயனர்களின் தேவையை நிறைவேற்றும் வகையில், வெவ்வேறு கட்டண வரம்புகளில் பல ரீசார்ஜ் திட்டங்களை வழங்குகிறது, அவை வெவ்வேறு நன்மைகளுடன் வருகின்றன. 

டேட்டா மற்றும் ஓடிடி நன்மைகளை வழங்கும் சிறந்த திட்டம்

ஜியோவின் பல்வேறு வகை ரீசார்ஜ் திட்டங்களில்,  டேட்டா மற்றும் ஓடிடி நன்மைகளை வழங்கும் சிறந்த திட்டம் ஒன்றைப் பற்றி இன்று அறிந்து கொள்ளலாம். அதில் நீங்கள் தினமும் 2 ஜிபி டேட்டாவுடன் 12 OTT செயலிகளின் இலவச சந்தாவைப் பெறுவீர்கள். இந்தத் திட்டத்தைப் பற்றி விரிவாகக்  அறிந்து கொள்வோம்.

ஜியோவின் சிறந்த பொழுதுபோக்கு திட்டம்

பயனர்களின் பல்வேறு வித தேவைகளுக்கு ஏற்ப அனைத்து வகையான திட்டங்களும் ஜியோவின் போர்ட்ஃபோலியோவில் கிடைக்கின்றன. ஜியோ தனது பயனர்களுக்கு வரம்பற்ற அழைப்பு மற்றும் டேட்டா மற்றும் இலவச OTT ஆப்ஸ் திட்டங்களை வழங்குகிறது. OTT ஆப்ஸில் ஆன்லைன் உள்ளடக்கத்தைப் பார்க்க விரும்பினால், இந்தத் திட்டங்கள் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். இவ்வளவு நன்மைகளை அள்ளித் தரும் ஜியோ திட்டத்தின் கட்டணம் ரூ. 448 மட்டுமே. இந்த திட்டத்தை நீங்கள் ஜியோவின் இணையதளத்தில் உள்ள பொழுதுபோக்கு திட்ட பிரிவில் காணலாம்.

ஜியோ திட்டத்தின் நன்மைகள்

ஜியோவின் ரூ. 448 திட்டம் 28 நாட்கள் வேலிடிட்டியுடன் வருகிறது. இதில் பயனர்களுக்கு வரம்பற்ற அழைப்பு வசதியை வழங்குகிறது. அதாவது நாடு முழுவதும் உள்ள எந்த நெட்வொர்க்கிலும் எத்தனை அழைப்புகளை வேண்டுமானாலும் செய்யலாம். பயனர்கள் தினமும் 100 குறுஞ்செய்திகளை அனுப்பும் வசதியையும் பெறுகின்றனர். இந்த திட்டத்தில், பயனர்கள் தினமும் 2 ஜிபி டேட்டாவைப் பெறுகிறார்கள். இந்த வகையில் பயனர்கள் மொத்தம் 56 ஜிபி டேட்டாவைப் பெறுகிறார்கள்.

12 OTT செயலிகளுக்கான இலவச சந்தா

உங்களிடம் 5G ஸ்மார்ட்போன் இருந்தால் மற்றும் உங்கள் பகுதியில் 5G நெட்வொர்க் இருந்தால், நீங்கள் 5G இணையத்தையும் பயன்படுத்தலாம். இது தவிர, பயனர்கள் இந்த திட்டத்தில் Sony LIV, ZEE5, JioCinema Premium, Lionsgate Play, Discovery+, Sun NXT, Kanchha Lannka, Planet Marathi, Chaupal, Hoichoi, FanCode, JioTV, JioCloud ஆகியவற்றின் இலவச சந்தாவைப் பெறுகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.