இந்து மதம் மாறுகிறார் ஸ்டீவ் ஜாப்ஸ் மனைவி லாரன் பாவல்? – அமெரிக்க துறவிக்கு மகா மண்டலேஷ்வர் பதவி

புதுடெல்லி: அமெரிக்​கா​வின் தாமஸ் மெர்​ரிட் நால்ஸ் என்பவரின் மகனாகப் பிறந்​தவர் வைஸானந்த் கிரி. தனது 15 வயதில் ஆதி சங்கராச்​சா​ரி​யாரின் கொள்கைகளால் வைஸானந்த் ஈர்க்​கப்​பட்​டார்.

பிறகு, நிரஞ்சனி அகாடா​வின் வாராணசி மடத்​தின் மகரிஷி மகேஷ் யோகி​யின் தொடர்​பில் வந்தார். பின்னர் அவரது பெயர் வைஸானந்த் கிரி என மாற்​றப்​பட்​டது. அதன்​பின் இந்து மதக் கொள்​கைகளை பின்பற்றி, யோகாகலை நிபுணரானார். கடந்த 2013-ல் பிரயாக்​ராஜின் கும்​பமேளா​வில் நிரஞ்சனி அகாடா​வில் இணைந்​தவர் அதன் தலைவர் சுவாமி கைலாசானந்தா முன்னிலை​யில் வைஸானந்த் கிரி துறவறம் பூண்​டார். இவருக்கு மகரிஷி பட்ட​மும் கிடைத்​துள்ளது.

தற்போது, அமெரிக்​கா​வின் அரிசோனா​வில் யோகா பயிற்சி நிலை​ய​மும் நடத்தி வருகிறார். அத்துடன் சம்ஸ்​கிருத மொழியை​யும் வளர்த்து வருகிறார். இவரிடம் யோகா கற்கும் அமெரிக்​கர்கள் பலர் இந்து மதத்​தால் ஈர்க்​கப்​பட்டு வருகின்​றனர். இவர்​களில் ஆப்பிள் நிறு​வனத்​தின் இணை நிறு​வனர் ஸ்டீவ் ஜாப்​ஸின் மனைவி லாரன் பாவலும் அடங்​கு​வார்.

வைஸானந்த்​திடம் யோகா கற்ற லாரன் இந்து மதத்தை நேசிக்கத் தொடங்கி உள்ளார். பிரயாக்​ராஜில் நேற்று தொடங்கிய மகா கும்​பமேளா​வுக்கு லாரன் பாவலுடன் அமெரிக்​கர்கள் பலரும் வந்துள்ளனர். இந்த மகா கும்​பமேளா​வில் துறவி வைஸானந்த் கிரிக்கு, நிரஞ்சனி அகாடா சார்​பில் மகா மண்டலேஷ்வர் பதவி நேற்று அளிக்​கப்​பட்​டுள்​ளது. அமெரிக்​கா​வில் இந்து மதத்​துக்காக செய்து வரும் பணியை அங்கீகரித்து இந்த பதவி அளிக்​கப்​பட்​டுள்​ளது.

கல்பவாச​ம்: இந்நிலை​யில், தனது குரு​வுடன் மகா கும்​பமேளா​வுக்கு வந்துள்ள லாரன் பாவல், கல்பவாச​மும் செய்ய உள்ளார். அவருக்கு முன்​கூட்​டியே நிரஞ்சனி அகாடா​வினர், கமலா என்ற பெயர் சூட்​டி​யுள்​ளனர். இதுகுறித்து ‘இந்து தமிழ் திசை’ நாளிதழிடம் நிரஞ்சனி அகாடா துறவிகள் கூறுகை​யில், “கல்​பவாசம் செய்த பின் இந்துவாக வேண்​டும் என்ற கட்டாயம் கிடை​யாது. இதன்​மூலம், அவர்கள் இந்து மதத்​தின் மீது ஈர்ப்புள்​ளவர்​களாகி விடு​வர். தற்போது நிரஞ்சனி அகாடா மகா மண்டலேஷ்வர் கைலாஸானந்த் கிரி​யின் சீடராக லாரன் உள்ளார். இதன் அடுத்த நிலை​யில் லாரன் இந்து துறவியாக வாய்ப்புள்​ளது” என்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.