சென்னை: இலங்கை கடற்தொழில், நீரியல் வளங்கள் மற்றும் கடல் வளங்கள் அமைச்சரும் ஜனதா விமுக்தி பெரமுனா கட்சியின் மத்தியக் குழு உறுப்பினருமான ராமலிங்கம் சந்திரசேகர், பெருந்தோட்டம் மற்றும் சமூக உட்கட்டமைப்புத் துறை துணை அமைச்சரும் ஜேவிபி கட்சியின் மாவட்ட ஒருங்கிணைப்பாளருமான சுந்தரலிங்கம் பிரதீப் ஆகியோர் சென்னை வந்தனர்.
பின்னர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலக்குழு அலுவலகம் சென்ற அவர்களை கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் வரவேற்றனர்.
அப்போது தமிழக மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்லும்போது ஏற்படும் பிரச்சினைகள் குறித்து கவலை தெரிவிக்கப்பட்டது. இலங்கை தோட்ட தொழிலாளர்களின் வாழ்விட, வாழ்வாதார பிரச்சினைகளில் அரசு கவனம்செலுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.