மதுரை: தனக்கு கிடைத்த தங்க காசு பரிசை சிங்கப்பெண்ணுக்கு கொடுத்து, மாடு அவிழ்த்து விட்ட வீரமங்கையை மகிழ்ச்சிப்படுத்திய மதுரை வீரன் தொடர்பான நெகிழ்ச்சி வீடியோ வைரலாகி வருகிறது. மதுரை அவனியாபுரத்தில் பொங்கலன்று புகழ்பெற்ற ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இந்த ஜல்லிகட்டு போட்டியில் 1,100 காளைகள் மற்றும் 900 மாடுபிடி வீரர்கள் பங்கேற்ற னர். போட்டியில் வெற்றிபெற்ற வீரர்களுக்கும், வெற்றிபெற்ற மாடுகளின் உரிமையாளர்களுக்கும் ஏராளமான பரிசுகள் வழங்கப்பட்டன. அதன்படி, டிராக்டர், கார் மற்றும் இருசக்கர வாகனங்கள், தங்கக்காசுகள் என […]