இந்திய அணியின் பயிற்சியாளர் பதவியில் இருந்து விலகும் முக்கிய வீரர்..!

Morne Morkel | ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் தோல்வி அடைந்த நிலையில், அந்த தொடரின்போது பந்துவீச்சு பயிற்சியாளர் மோர்னே மோர்கல் மற்றும் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் இடையே மோதல் ஏற்பட்ட சம்பவம் இப்போது கசிந்திருக்கிறது. இதனால் கம்பீர் மீது மோர்னே மோர்கல் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்திடம் புகாரும் அளித்திருக்கிறார். ஆஸ்திரேலியா சுற்றுப்பயணத்தில் இந்தியா 1-3 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரை மோசமாக இழந்தது. இதன் பிறகு, இந்திய அணியில் அசௌகரியமான சூழல் நிலவிக் கொண்டிருக்கிறது. சமீபத்தில், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ) தலைமை பயிற்சியாளர் கம்பீர், தலைமை தேர்வாளர் அஜித் அகர்கர் மற்றும் கேப்டன் ரோஹித் முன்னிலையில் ஒரு ஆலோசனை கூட்டத்தை நடத்தியது. அதில் பல விவகாரங்கள் விவாதிக்கப்பட்டுள்ளது.

கம்பீர் – மோர்னே மோர்கல் மோதல்

ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் வெற்றி பெற வேண்டும் என்ற அழுத்தம் ஒட்டுமொத்த இந்திய அணி மீதும் இருந்தது. முதல் டெஸ்டில் வெற்றி பெற்றாலும், அதன் பிறகு, இந்திய அணி வெற்றி பெறத் தவறிவிட்டது. அதனால் டெஸ்ட் தொடரில் 1-3 என்ற கணக்கில் தோல்வியை சந்திக்க வேண்டியிருந்தது. இதே டெஸ்ட் தொடரில் கேப்டன் ரோஹித் சர்மா மோசமான பேட்டிங் காரணமாக கடும் விமர்சனத்துக்கும் உள்ளானார். பயிற்சியாளர் கவுதம் கம்பீர் இந்திய அணியின் தோல்விக்குப் பிறகு டிரெஸ்ஸிங் ரூமில் கடுமையாக நடந்து கொண்டதாகவும் தகவல் பரவியது. இருப்பினும் பத்திரிகையாளர் சந்திப்பில் அவர் அதை மறுத்தார். இப்போது டைம்ஸ் ஆஃப் இந்தியாவில் ஒரு செய்தி வந்துள்ளது. அதில், ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தின் போது கம்பீருக்கும் மோர்கலுக்கும் இடையே விரிசல் ஏற்பட்டதாக தெரிவித்துள்ளது.

கம்பீர் மீது பிசிசிஐ-ல் புகார்

டைம்ஸ் ஆஃப் இந்தியா அறிக்கையின்படி, ஆஸ்திரேலிய சுற்றுப் பயணத்தில் மோர்னே மோர்கல் பயிற்சிக்கு சற்று தாமதமாக வந்ததாக தெரிகிறது. தனிப்பட்ட விஷயங்களுக்காக அவர் பயிற்சிக்கு குறித்த நேரத்தில் வரவில்லை. இதனால் கடுப்பான கவுதம் கம்பீர் பிளேர்கள் முன்னிலையிலேயே கண்டிதிருக்கிறார். இந்த விவகாரம் அப்போதே பிசிசிஐ-க்கும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது கூறியுள்ளது.

சிக்கலில் அபிஷேக் நாயர்

அதேபோல் அபிஷேக் நாயர் பேட்டிங் பயிற்சியாளர் பதவியும் இப்போது கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணி சிறப்பாக விளையாடவில்லை என்றால் இந்திய அணியின் ஒட்டுமொத்த பயிற்சியாளர் குழுவும் மாற்றியமைக்கப்பட வாய்ப்புள்ளது. குறிப்பாக மோர்னே மோர்க்கல் மற்றும் அபிஷேக் நாயர் இருவரும் அவர்கள் பொறுப்பில் இருந்து விடுவிக்க அதிக வாய்ப்பு இருப்பதாக பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. பந்துவீச்சு பயிற்சியாளர் மோர்னே மோர்கல் அவருடைய பொறுப்பில் இருந்து விலக அதிக வாய்ப்பு உள்ளது என்றும் கூறப்படுகிறது.

மேலும்படிக்க | விராட் கோலி, ரோகித் சர்மா கடைசி சர்வதேச கிரிக்கெட் போட்டி இதுதான்..!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.