சென்னை: திருவள்ளுவர் தினத்தையொட்டி, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் கேவி.தங்கபாலு உள்பட 10 பெருந்தகையாளர்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் விருது மற்றும் பொற்கிழி வழங்கி கவுரவித்தார். திருவள்ளுவர் தினத்தை ஒட்டி, சென்னை காமராஜர் சாலையில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு கீழ் வைக்கப்பட்டுள்ள உருவப் படத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார். இதைத்தொடர்ந்து சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு 10 பெருந்தகையாளர்களுக்கு விருது மற்றும் பொற்கிழி வழங்கினார். திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு அரசு சார்பில் […]