`பிக் பாஸ் சீசன் 8′ இறுதி நாட்களை நோக்கி நகர்ந்துக் கொண்டிருக்கிறது.
டாப் 6 போட்டியாளர்களுடன் வீட்டிலிருந்து எவிக்ட்டான பலரும் இப்போது விருந்தினராக வீட்டிற்குள் வந்திருக்கிறார்கள். அத்தனை நபர்களுடனும் பிக் பாஸ் வீட்டில் நேற்றைய தினம் பொங்கல் பண்டிகையை கொண்டாடியிருந்தனர்.
கொண்டாட்டம் முடிவை எட்டியதும் பலரும் ஆவலோடு எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த பணப்பெட்டி வந்தது. இம்முறை புதியதாக பெட்டியை வீட்டிற்கு வெளியே வைத்த பிக் பாஸ், அந்தப் பொட்டியை எடுத்துக் கொண்டு மீண்டும் இந்த வீட்டிற்குள் வருபவர் மீண்டும் இந்த போட்டியில் தொடரலாம் என அறிவித்தார். அதை மனதில் கொண்டு 50,000 தொகை மதிப்புடைய முதல் பணப்பெட்டியை அதிரடியாக ஓடிச்சென்று எடுத்துவிட்டு பிக் பாஸ் வீட்டிற்குள் திரும்பினார் முத்துக்குமரன். இன்றைய எபிசோடிலும் சில பணப்பெட்டிகள் வைக்கவிருப்பதால் அதை வேகமாகச் சென்று எடுத்துக் கொண்டு வீட்டிற்குள் வருவதற்கு பலரும் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இன்றைய எபிசோடின் முதல் ப்ரோமோ தற்போது வெளியாகியிருக்கிறது. டாப் 6 போட்டியாளர்கள் தங்களின் கடினமான மற்ற போட்டியாளர்கள் குறித்து பேசச் சொல்லியிருக்கிறார் பிக் பாஸ். இதில் முத்துகுமரன். “ஜாக்குலின், இந்த வீட்டுக்கு வந்த முதல் நாள்ல இருந்து சந்தேக கேஸ்ல வச்சிருக்கிற ஆள்!” என வெளிப்படையாக பேசியிருக்கிறார்.
ரயான், “ எனக்கு பவித்ராவை பிடிக்காது. அதிகமாக முரண்பாடு வந்தது பவித்ராகூடதான்’ எனக் கூறியிருக்கிறார். “விஷால் ஒரு கேம்மை இப்படி பண்ணணும்னு யோசிச்சு பண்ணினதுனாலதான் உன்னுடைய கேம் லேட்டாக புரிஞ்சது” என ஜாக்குலினும், “முத்துக்குமரன்…தந்திரம், கூட்டணி இந்த விஷயமெல்லாம் எனக்கு பிடிக்காது. அதுல நான் முரண்படுறேன்.” என சவுந்தர்யாவும் வெளிப்படையாக கூறியிருக்கிறார். இந்த செயல் இன்றைய பிக் பாஸ் எபிசோடில் காரசாரமான விவாதத்தை கிளப்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்… புத்தம் புதிய விகடன் ப்ளே… உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்…