இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான திரைப்படம் ஜெயிலர். 2023ம் ஆண்டு வெளியான இந்த திரைப்படம் ரஜினிகாந்த் ரசிகர்களால் கொண்டாடப்பட்டதுடன், 600 கோடிக்கும் மேலாக வசூல் செய்து சாதனை படைத்தது.
இந்த படத்தில் நெல்சன்-அனிருத் கூட்டணியின் இசை பெரும் வரவேற்பைப் பெற்றது. குறிப்பாக தமன்னா நடனமாடிய காவாலா பாடல் பட்டி தொட்டி எங்கும் ஹிட் ஆனது.
ரஜினிகாந்தின் ஆக்ஷன் காட்சிகளும் வரவேற்பைப் பெற்றன. அத்துடன் சிவராஜ்குமார், மோகன்லால், ஜாக்கி ஷெராப் மாஸ் காட்சிகளும் பெரிய அளவில் பேசப்பட்டன.
யோகிபாபு மற்றும் சுனில், ரெட்டின் கிங்ஸ்லி உள்ளிடோரின் காமடி காட்சிகளும் கச்சிதமாக வொர்க் அவுட் ஆக, பக்காவான கமர்ஷியல் சினிமாவாக வெற்றி பெற்றது ஜெயிலர்.
ஜெயிலரின் வெற்றியைத் தொடர்ந்து அந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாவதாக திரைத்துறை வட்டாரத்தில் பேச்சுகள் எழுந்தன. இந்தநிலையில் நெல்சன் – அனிருத் – ரஜினிகாந்த் கூட்டணி, மீண்டும் ஜெயிலர் 2 படத்தில் இணைவதை உறுதி செய்துள்ளது தயாரிப்பு நிறுவனம்.
இதற்காக அறிவிப்பு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
இயக்குநர் நெல்சனின் டார்க் காமெடி தீமுக்கு தனி ரசிகர்கள் இருப்பதுபோலவே அவரது அறிவிப்பு வீடியோக்களுக்கும் தனி ரசிகர் பட்டாளம் உள்ளது.
JAILER 2 படத்துக்கான நகைச்சுவையான, மியூசிக்கலான அனவுன்ஸ்மென்ட் வீடியோ…