தோரணமலை சங்கல்ப விழா: 2025 பிப்ரவரி 11-ம் நாள் செவ்வாய்க்கிழமை தைப்பூச நன்னாளில் இங்கு சிறப்பு வழிபாடுகள், சங்கல்ப பூஜைகள் நடைபெற உள்ளன. இங்கு முருகனை பூஜித்து சங்கல்பித்துக் கொண்டால் சகல நோய்களும் தீரும்; 16 வகை செல்வங்களும் சேரும்.
முன்பதிவு மற்றும் சங்கல்பம் விவரங்களுக்கு: 044-66802980/07
ஹோமத்தில் கலந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யவும்.
தென்காசி மாவட்டம், குற்றாலம் அருகே தென்காசியிலிருந்து கடையம் போகும் வழியில், அமைந்திருக்கிறது தோரணமலை. இங்கே மலையின் அடிவாரத்திலும் மலை உச்சியிலும் அழகன் முருகன் எழிலார்ந்த சூழலில் கோயில் கொண்டு பக்தர்களுக்கு அருள்பாலித்துக்கொண்டிருக்கிறார். திருமண வரமருளும் தலமாகவும், புத்திர பாக்கியம் அருளும் தலமாகவும் உள்ளதால் இது பரிகாரத் தலமாகவும் உள்ளது.
தென்பொதிகையில் சித்தர் பெருமக்களுக்கு அருள் செய்ய முருகப்பெருமான் விரும்பியபோது அவரது ஞான சக்தியே மலையாக அமர்ந்து காரணமலை எனும் தோரணமலையானதாம். யானை (வாரணம்) அமர்ந்து இருப்பதைப்போல காட்சியளிப்பதால் ‘வாரண மலை’ என்றும் சித்தர் பெருமக்கள் பலர் கூடி நோய்களுக்கான காரணங்களை அலசி மருந்துகள் தயாரித்த மலை என்பதால் இது ‘காரண மலை’ என்றும் அழைக்கப்படுகிறது.
மேற்குத் மலையின் தோரணவாயிலாக இருப்பதால் ‘தோரண மலை’ என்றும் இது போற்றப்படுகிறது. அழகிய மலையின் அடிவாரத்தில் இருக்கும் கோயிலில் வல்லப விநாயகர், நவகிரக சந்நிதி, குருபகவான், மகாலட்சுமி, சரஸ்வதி, சப்த கன்னிமார்கள், கன்னிமாரம்மன், நாகர்கள் ஆகிய சந்நிதிகளை தரிசிக்கலாம். அடிவாரக் கோயிலை கடந்து சுமார் 1,000 படிகள் கடந்து மேலே சென்றால் உச்சியில் உள்ள குகைக்கோயிலை அடையலாம்.
சிவ – பார்வதி திருமணத்துக்கு தென்னகம் வந்த அகத்தியப் பெருமான் தோரணமலையின் அழகையும் வளத்தையும் கண்டு இங்கேயே தங்கிவிட்டார். அதுமட்டுமா, முருகப்பெருமானின் ஆலோசனையால் இங்கே ஒரு மாபெரும் மருத்துவச்சாலையை உருவாக்கி பல சீடர்களை உருவாக்கினார். அப்போது மலைமீது அகத்தியருக்குக் காட்சி தந்த குகை, இன்றும் முருகப்பெருமான் வீற்றிருக்கும் கருவறையாக உள்ளது. அகத்தியரின் மாணாக்கராக இங்கு வசித்துவந்த தேரையரின் ஜீவசமாதியும் இங்கேயே உள்ளது என்கிறார்கள் பக்தர்கள்.
தோரணமலையில் ஆயிரக்கணக்கான அரியவகை மூலிகைகளைக் கண்ட அகத்தியர் முருகப்பெருமானின் வழிகாட்டலின்படி இங்கே ஒரு மாபெரும் மருத்துவச்சாலையை உருவாக்கி பல சீடர்களை உருவாக்கினார். இங்கு அகத்தியருக்குக் காட்சி தந்த தோரணமலை முருகப்பெருமான் அகத்தியருக்கு ஆலோசனை அளித்து அந்த இடத்தில் மாபெரும் மருத்துவ கலாசாலையை நிறுவச் செய்து 72 விதமான பாட வகுப்புகளையும் உருவாக்கித் தந்தார் என தலபுராணம் கூறுகின்றது.
முன்பதிவு மற்றும் சங்கல்பம் விவரங்களுக்கு: 044-66802980/07
ஹோமத்தில் கலந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யவும்.
இன்றும் பல சித்தர்கள் அரூபமாக வந்திருந்து முருகனை வழிபடும் தெய்வ மலை இது என்கிறார்கள். ராமபிரான் இங்கு வந்து அகத்தியரை தரிசித்து சிவ தீட்சை பெற்றார் என்றும் சொல்கிறார்கள். ‘குகைக்குள் வாழும் குகனே’ என்று மகாகவி பாரதி வியந்து பாடிய முருகப்பெருமானும் இந்த தோரணமலை வாசனைத்தான் எனப்படுகிறது.
அகத்தியரோடு அவரது சீடரான தேரையரும் இங்கு தங்கி மருத்துவ ஆய்வுகள் பல செய்து புதிய மருந்துகளைக் கண்டறிந்தார் எனப்படுகிறது. 700 ஆண்டுகள் இங்கு தங்கி இருந்து மருத்துவ ஆய்வுகளும் சேவைகளும் புரிந்த தேரையர், பின்னர் இங்கேயே ஜீவசமாதி அடைந்தார். அதன் பிறகும் பல சித்தப் புருஷர்களும் ஞானியரும் இங்கு தங்கி தவம் புரிந்து லோக க்ஷேமத்துக்கு நன்மைகள் செய்தார்கள் என்கிறது தலவரலாறு.
பல காலம் சித்தர்களின் தாயகமாக விளங்கிய இந்த மலை, பிறகு அழிந்துவிட, ஆதிநாராயணன் என்ற அன்பரின் மூதாதையர் காலத்தில் இம்மலை குறித்து தெரிய வந்ததாம். அப்போது அவர்கள் கனவில் தோன்றிய முருகப்பெருமான், மலைமீது குகையில் இருப்பதாக வெளிப்படுத்த, அங்கு மீண்டும் வழிபாடுகளும் விழாக்களும் உருவாகின. பிறகு ஆதிநாராயணன் காலத்தில் இந்த மலையும் ஆலயமும் பிரசித்தி பெற ஆரம்பித்தது. இன்றும் அரூப வடிவில் சித்தர்கள் உலாவும் இந்த மலையின் மகத்துவத்தை எழுத்தால் வர்ணிக்க முடியாது. இந்த தலத்தில் தைப்பூச விழா வெகு சிறப்பானது என்கிறார்கள் பக்தர்கள்.
உலக நன்மைக்காகவும், சக்தி விகடன் வாசகர்கள் நல வாழ்வுக்காகவும் வரும் 2025 பிப்ரவரி 11-ம் நாள் செவ்வாய்க்கிழமை தைப்பூச நன்னாளில் இங்கு சிறப்பு வழிபாடுகள், சங்கல்ப பூஜைகள் நடைபெற உள்ளன. இங்கு முருகனை பூஜித்து சங்கல்பித்துக் கொண்டால் சகல நோய்களும் தீரும்; 16 வகை செல்வங்களும் சேரும். நீண்ட ஆயுளும் நீடித்த ஆரோக்கியமும் பெறலாம் என்பது நிச்சயம். மேலும் கவலைகளும் தரித்திரமும் நீங்கி, ஆனந்தமும் ஐஸ்வர்யமும் கூடும். குறிப்பாக தடைபட்ட மங்கல காரியங்கள் நடைபெறும் என்பது விசேஷம்.
குறிப்பு: உங்கள் தெளிவான முகவரியை குறிப்பிடவும். அது பிரசாதம் சீக்கிரம் வந்தடைய உதவும்.
முன்பதிவு மற்றும் சங்கல்பம் விவரங்களுக்கு: 044-66802980/07
QR CODE FOR THAIPPOSAM FESTIVAL REGISTRATION: