மதுரை – தூத்துக்குடி ரயில்வே திட்டத்துக்கு நிலம் தொடர்பான பிரச்சினை எதுவும் இல்லை: ரயில்வே அமைச்சர் விளக்கம்

சென்னை: ‘மதுரை -தூத்​துக்​குடி ரயில்வே திட்​டத்​தில் தமிழக அரசிடம் இருந்து நிலம் தொடர்பான பிரச்சினை எதுவும் இல்லை’ என ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் விளக்கம் அளித்​துள்ளார்.

சென்னை, பெரம்​பூர் ஐசிஎஃப் தொழிற்​சாலை​யில், மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கடந்த 10-ம் தேதி​அன்று ஆய்வு செய்​தார். அப்போது, நடைபெற்ற செய்தி​யாளர் சந்திப்​பில், தூத்​துக்​குடி​யில் இருந்து அருப்​புக்​கோட்டை வழியாக மதுரைக்கு புதிய ரயில் பாதை திட்டம் குறித்து செய்தி​யாளர்கள் கேள்வி எழுப்​பினர்.

அதற்கு பதில் அளித்த அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் இத்திட்டம் வேண்​டாம் என தமிழக அரசு எழுத்​துப்பூர்​வமாக கடிதம் அனுப்பி உள்ளது. அதனால், இத்திட்​டத்தை மத்திய அரசு முழு​மையாக கைவிட்டது என்று தெரி​வித்​தார். இது பெரும் சர்ச்​சையை கிளப்​பியது.

இதற்கு பதில் அளித்த தமிழக போக்கு​வரத்து துறை அமைச்சர் சிவசங்​கர், மதுரை – தூத்​துக்​குடி புதிய ரயில் பாதை திட்​டத்​துக்கு இரண்டு பகுதி​களாக நிலம் எடுப்பு பணி மேற்​கொள்​ளப்​பட்​டது. இதற்கான நிர்வாக அனும​தி​யும் தமிழக அரசு வழங்கி உள்ளது. எனவே, இத்திட்​டத்தை கைவிடு​மாறு அரசு சார்​பில் கோரப்​பட்டது அடிப்படை ஆதாரமற்​றது’ என தெரி​வித்​தார். இந்நிலை​யில், மதுரை -தூத்​துக்​குடி ரயில்வே திட்​டத்​தில் தமிழக அரசிடம் இருந்து நிலம் தொடர்பான பிரச்சினை எதுவும் இல்லை என ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் விளக்கம் அளித்​துள்ளார்.

இதுகுறித்து, தெற்கு ரயில்வே நேற்று வெளி​யிட்ட செய்திக் குறிப்பு: பெரம்​பூரில் ஐசிஎஃப் தொழிற்​சாலை​யில், நடைபெற்ற செய்தி​யாளர் சந்திப்​பில், பத்திரிகை​யாளர்கள் ஒரே நேரத்​தில் கேள்விகள் கேட்க, மதுரை – தூத்​துக்​குடி புதிய பாதை திட்டம் குறித்து கேள்வி கேட்​கப்​பட்​டது, ஆனால் தொழிற்​சாலை​யின் பின்னணி இரைச்சல் காரணமாக அது தனுஷ்கோடி திட்டம் என்று கேட்டு, அதற்கு ஏற்றவாறு ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பதில் அளித்​தார்.

இதன்​படி, தனுஷ்கோடி பாதை திட்டம் தொடர்​பாக, நிலம், சுற்றுச்​சூழல் பிரச்​சினைகள் காரண​மாக, இத்திட்டம் கைவிடப் ​படலாம் என, ரயில்வே அமைச்​சகத்​துக்கு, மாநில அரசு கடிதம் எழுதி​யுள்ள​தாக, அமைச்சர் பதிலளித்​தார். இதனை செய்தி​யாளர்கள் அவரது மேற்​கண்ட கருத்​துக்களை மதுரை-தூத்​துக்​குடி திட்​டத்​துக்காக கூறியதாக எடுத்​துக் கொண்​ட​தால், எதிர்​பாராத குழப்பம் ஏற்பட்​டது.

மதுரை-தூத்​துக்​குடி திட்​டத்​தில் தமிழக அரசின் நிலம் தொடர்பான எந்தப் பிரச்​சினை​யும் இல்லை என அமைச்சர் தெளிவுபடுத்​தி​யுள்​ளார். இரைச்​சலான தொழிற்​சாலை சூழலில் பத்திரி​கை​யாளர்கள் ஒரே நேரத்​தில் பல கேள்வி​களை கேட்​ட​தால் தவறான தகவல் புரிதல் ஏற்பட்​டது. இவ்வாறு செய்திக் குறிப்​பில் தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.

இதற்​கிடையே, தமிழக போக்கு​வரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் நேற்று வெளி​யிட்ட செய்திக்​குறிப்​பில், ‘மதுரை – தூத்​துக்​குடி அகல ரயில் பாதை திட்டம் தென் தமிழகத்​தின் வளர்ச்​சிக்கு முக்​கியமான திட்​டம். எனவே, இத்திட்​டத்​துக்கு தேவையான நில எடுப்பு பணிகளுக்கு தமிழக அரசு முழு ஒத்துழைப்பு அளித்து வரு​கிறது. இதற்கான உரிய நிதி ஒதுக்​கீடு செய்து, இத்திட்​டத்தை ​விரைந்து நிறைவேற்ற மத்​திய அரசை, தமிழக அரசு தொடர்ந்து வலி​யுறுத்​தும்​’ என்​று கூறப்​பட்​டுள்​ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.