ரிஷப் பண்ட் கேப்டனாக பொறுப்பேற்க உள்ளார்! விரைவில் அறிவிப்பு -முழு விவரம்

Ranji Trophy Latest News In Tamil: ரஞ்சி டிராபி சீசன் நடைபெறவுள்ள  நிலையில், உள்ளூர் கிரிக்கெட் போட்டியில் அனுபவமிக்க வீரர்கள் மற்றும் வளர்ந்து வரும் நட்சத்திர வீரர்கள் களம் இறங்க உள்ளதால், அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. இந்தமுறை ரஞ்சி டிராபி சீசன் சுவாரஸ்யமாக இருக்கும் என்று எதிர் பார்க்கப்படுகிறது. அதுக்குறித்து முழு விவரத்தையும் பார்ப்போம்

சாம்பியன்ஸ் டிராபிக்கான இந்திய அணி விரைவில் அறிவிக்கப்படும்

ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்திலிருந்து ரிஷப் பண்ட் இந்தியா திரும்பியுள்ளார். இருப்பினும், இது அவருக்கு மிகவும் சிறப்பு வாய்ந்த சுற்றுப்பயணமாக இல்லை. சில போட்டிகளில் அவர் அற்புதமாக பேட்டிங் செய்தாலும், அவரது ஆக்ரோஷமான பாணி மற்றும் அவரிடமிருந்து தொடர்ந்து எதிர்பார்க்கப்படும் பெரிய ரன்கள் இந்த முறை இல்லை. இந்தியா மற்றும் இங்கிலாந்து தொடர் மற்றும் சாம்பியன்ஸ் டிராபிக்கான இந்திய அணி விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. அதில் ரிஷப் பண்ட் தேர்ந்தெடுக்கப்படுவார் என்று எதிர் பார்க்கப்படுகிறது. ஆனால் அதற்கு முன், அவர் தனது ரஞ்சி அணியை வழிநடத்த வாய்ப்பு உள்ளது.

ரஞ்சி டிராபி தொடரில் விளையாடும் முக்கிய வீரர்கள்

ஒரு வீரர் சர்வதேச போட்டிகளில் விளையாடவில்லை என்றால், அந்த நேரத்தில் அவர்கள் உள்நாட்டு கிரிக்கெட்டில் விளையாட வேண்டும் என்று பிசிசிஐ அறிவுறுத்தி உள்ளது. இதன் காரணமாக ரிஷப் பண்ட், யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் ஷுப்மான் கில் உட்பட பல சர்வதேச வீரர்கள் வரவிருக்கும் ரஞ்சி டிராபி போட்டிகளில் விளையாட உள்ளனர். அதேபோல ரோஹித் சர்மா தனது மும்பை அணி வீரர்களை சந்தித்த பிறகு, வான்கடே மைதானத்தில் சிறிது நேரம் பயிற்சி செய்தார். ஆனால் அவர் போட்டியில் விளையாடுவாரா என்பது நிச்சயமற்றது.

டெல்லி அணிக்காக விளையாடும் ரிஷப் பண்ட்

வரவிருக்கும் ரஞ்சி டிராபி தொடரில் டெல்லி அணிக்காக ரிஷப் பண்ட் விளையாடுவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. அவர் கேப்டனாக நியமிக்கப்படலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. டெல்லி அணியின் முதல் ரஞ்சி டிராபி போட்டி ஜனவரி 23 ஆம் தேதி ராஜ்கோட்டில் நடைபெற உள்ளது. மேலும் ரஞ்சி டிராபிக்கான டெல்லி அணி அடுத்த சில நாட்களில் அறிவிக்கப்படும். அப்பொழுது அணியின் தலைமைப் பொறுப்பு  ரிஷப் பண்டுக்கு வழங்கப்படலாம்.

முதல் தர கிரிக்கெட்டில் ரிஷப் பந்தின் சாதனை

முதல் தர கிரிக்கெட்டில் ரிஷப் பண்டின் புள்ளிவிவரங்கள் சுவாரஸ்யமாக உள்ளன. அவர் 68 போட்டிகளில் 4,868 ரன்கள் எடுத்துள்ளார். சராசரியாக 46.36 மற்றும் 81.45 ஸ்ட்ரைக் ரேட்டுடன், அவர் 11 சதங்கள் மற்றும் 24 அரை சதங்களையும் அடித்துள்ளார். ரிஷப் பபண்ட் தனது முதல் தர கிரிக்கெட் வாழ்க்கையை 2015 இல் தொடங்கினார். 

பயங்கரமான விபத்தில் சிக்கிய ரிஷப் பண்ட்

அதுமட்டுமில்லாமல் ஒரு பயங்கரமான விபத்தில் இருந்து மீண்ட பிறகு, உள்நாட்டு கிரிக்கெட்டில் ஒரு சில போட்டிகளில் மட்டுமே விளையாடி உள்ளார். அவர் களத்திற்குத் திரும்பிய பிறகு அவர் எவ்வாறு செயல்படுகிறார் என்பதைப் பார்க்க வேண்டும்.

விராட் கோலி குறித்து எந்த தகவலும் இல்லை

தற்போது வரை, வரவிருக்கும் ரஞ்சி டிராபி போட்டிக்கு விராட் கோலியின் இருப்பு குறித்து எந்த தகவலும் இல்லை. ரிஷப் பண்ட் பங்கேற்பதை உறுதி செய்துள்ளதால், இப்போது கவனம் விராட் கோலி மீது திரும்பி உள்ளது. மேலும் அவர் போட்டிக்கு தன்னைத் தயார்படுத்திக் கொள்வாரா என்பது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டு உள்ளது. விராட் கோலி தற்போது மும்பையில் உள்ளார். அலிபாக்கில் உள்ள தனது புதிய இல்லத்தின் திறப்பு விழாவுக்கு தயாராகி வருகிறார். இந்த நிகழ்வுக்குப் பிறகு அவர் தனது அடுத்தக்கட்ட பிளான் குறித்து பேசுவார் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

ரஞ்சி டிராபி தொடரில் ரோஹித் சர்மா?

அதேபோல ரோஹித் சர்மா சமீபத்தில் மும்பை ரஞ்சி அணியுடன் பயிற்சி செய்தார். இது வரவிருக்கும் போட்டியில் அவர் விளையாடக்கூடும் என்ற எதிர்பார்ப்பை எழுப்பி உள்ளது. 

ரஞ்சி டிராபியில் விளையாடும் ஜெய்ஸ்வால் மற்றும் கில்

இதற்கிடையில், இந்தியாவின் ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக இருந்த யஷஸ்வி ஜெய்ஸ்வால் (மும்பை) மற்றும் சுப்மான் கில் (பஞ்சாப்) இருவரும் தங்கள் இருப்பை உறுதிப்படுத்தி உள்ளனர் மற்றும் ரஞ்சி டிராபியில் அந்தந்த அணிகளுக்காக விளையாடுவார்கள்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.