சென்னை: ‘அ.தி.மு.க., சார்பில்,கழக நிறுவனத் தலைவர், ‘பாரத் ரத்னா’ இதய தெய்வம் புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். அவர்களின் 108-ஆவது பிறந்த நாளையொட்டி, அவரது திருஉருவச் சிலைக்கு மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தப்படும் என்றும், எம்.ஜி.ஆர்., பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம், அனைத்து சட்டசபை தொகுதிகளிலும் நடத்தப்படும்’ என, அக்கட்சி பொதுச்செயலர் பழனிசாமி அறிவித்துள்ளார். இதுதொடர்பாக, அதிமுக தலைமைக்கழகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், அதிமுக நிறுவனத்தலைவர் எம்.ஜி.ஆரின் 108-வது பிறந்த நாளான வருகிற 17-ந்தேதி […]