8-வது ஊதிய குழு அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்

புதுடெல்லி: மத்திய அரசு ஊழியர்களின் ஊதியத்தில் திருத்தம் செய்ய, 8-வது ஊதியக் குழு அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

மத்திய அரசு ஊழியர்களுக்கான ஊதிய விகிதங்கள், சலுகைகளை தீர்மானிக்க 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஊதியக் குழு அமைக்கப்படுகிறது. கடந்த 2016-ம் ஆண்டில் 7-வது ஊதியக் குழு அமைக்கப்பட்டது. இதன் பரிந்துரைப்படி, மத்திய அரசு ஊழியர்களுக்கான அடிப்படை சம்பளம் ரூ.7,000-ல் இருந்து ரூ.18,000 ஆக உயர்த்தப்பட்டது. குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.3,500-ல் இருந்து ரூ.9,000 ஆக உயர்த்தப்பட்டது. அதிகபட்ச அடிப்படை சம்பளம் ரூ.2,50,000 ஆகவும் அதிகபட்ச ஓய்வூதியம் ரூ.1,25,000 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டது.

7-வது ஊதியக் குழுவின் பதவிக் காலம் 2025 டிசம்பர் 31-ம் தேதி நிறைவடைகிறது. இந்த சூழலில், பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில் நேற்று நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில் 8-வது ஊதியக் குழு அமைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது. இக்குழுவின் பரிந்துரைகள் 2026 ஜனவரி 1 முதல் அமலுக்கு வரும்.
‘‘8-வது ஊதியக் குழு தலைவர், 2 உறுப்பினர்கள் விரைவில் நியமனம் செய்யப்படுவார்கள்’’ என்று மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.

ஊதியத்தை கணக்கிடுவதற்கான ‘ஃபிட்மென்ட் காரணி’, 7-வது ஊதியக் குழுவில் 2.57 என முடிவு செய்யப்பட்டதால், சம்பளம் 2.57 மடங்கு உயர்ந்தது. 8-வது ஊதியக் குழு 3 அல்லது அதற்கு மேல் ஃபிட்மென்ட் காரணியை முடிவு செய்ய வாய்ப்பு உள்ளது என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.