BB Tamil 8 : 60 மீட்டர் தூரம்… 30 விநாடி… பணப்பெட்டி டாஸ்க்கில் வீடு திரும்பினாரா விஷால்?!

பிக் பாஸ் நிகழ்ச்சியின் 102 -வது நாளுக்கான முதல் புரோமோ வெளியாகி இருக்கிறது.

இன்னும் மூன்று நாட்களில் பிக் பாஸ் நிகழ்ச்சி முடிவடைய இருக்கிறது. மக்கள் எதிர்பார்த்த பணப்பெட்டி டாஸ்க் நடைபெற்று வருகிறது. இந்தப் பணப்பெட்டி டாஸ்கில் இம்முறை பிக் பாஸ் பயங்கர ட்விஸ்ட் ஒன்றை வைத்திருக்கிறார். வழக்கமாக பணப்பெட்டி வைக்கப்பட்டு, குறிப்பிட்ட நேரத்தில் அதன் மதிப்பு கூடிக் கொண்டே இருக்கும். ஆனால் இம்முறை பணப்பெட்டியை எடுக்க முதன்முறையாக டாஸ்க் வைக்கப்பட்டு இருக்கிறது. அதன்படி பிக் பாஸ் வீட்டுக்கு வெளியே குறிப்பிட்ட தொலைவில் பணப்பெட்டி வைக்கப்படும்.

பிக்  பாஸ் போட்டியாளர்கள்
பிக் பாஸ் போட்டியாளர்கள்

அதில் குறிப்பிட்ட நேரத்திற்கு அந்த பெட்டியை எடுத்து வருபவர்களுக்கு அந்த பணம் சொந்தமாகும். ஒரு வேளை குறிப்பிட்ட நேரத்திற்குள் உள்ளே வராவிட்டால், அந்த போட்டியாளர் அப்படியே வெளியேற்றப்படுவார். அந்த வகையில் முதலில் 50 ஆயிரத்திற்கான பணப்பெட்டி வைக்கப்பட்டது. அதை முத்துக்குமரன் வெற்றிகரமாக எடுத்துக்கொண்டு உள்ளே வந்தார். பின்னர் 2 லட்சத்திற்கான பணப்பெட்டியை ரயான் எடுக்க சென்றார். அவருக்கு 25 விநாடிகள் கொடுக்கப்பட்டது.

ஆனால் அவர் 17 விநாடிகளிலேயே அந்த பணப்பெட்டியை எடுத்துக் கொண்டுவந்து 2 லட்சத்தை தன் வசப்படுத்தினார். இந்த டாஸ்கில் போகப் போகப் பணத்தின் மதிப்பு அதிகரிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் நேற்று( ஜனவரி 15) பணப்பெட்டி வைக்கப்பட்டு இருக்கிறது. அந்த பணப்பெட்டியை எடுத்து வர சென்ற ஜாக்குலின் குறிப்பிட நேரத்துக்குள் வீடு திரும்பவில்லை எனச் சொல்லப்படுகிறது. இது தொடர்பான காட்சிகள் இன்று ஒளிபரப்பாகலாம்.

விஷால்
விஷால்

இதனால் ஜாக்குலின் எலிமினேட் செய்யப்பட்டு இருக்கிறார் என்று சொல்லப்படுகிறது. இதனைத்தொடர்ந்து தற்போது வெளியாகி இருக்கும் இன்றைய நாளுக்கான முதல் புரோமோவில், 60 மீட்டர் தூரம் இருக்கிறது. சரியான பணப்பெட்டியை எடுத்துகொண்டு வர வேண்டும் என்று பிக் பாஸ் சொல்கிறார். அதனை எடுக்க விஷால் முன் வந்திருக்கிறார். விஷால் பணப்பெட்டியை எடுத்துகொண்டு சரியான நேரத்தில் பிக் பாஸ் வீட்டிற்கு வந்துவிட்டாரா? என்பதை இன்றைய எபிசோடில் பார்ப்போம்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.