Reliance Jio… டேட்டா ஒன்லி பேக்குகள்… 50 GB டேட்டாவுடன் OTT பலன்கள்.. பயனர்கள் ஹேப்பி

முகேஷ் அம்பானி தனது தனது ஜியோ வாடிக்கையாளர்களின் பல்வேறு விதமான தேவைகளுக்கு ஏற்ப பலவகையான ரீசார்ஜ் திட்ட திட்டங்களை அவ்வப்போது கொண்டு வருகிறார். அந்த வகையில், ஜியோ பயனர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையிலான, ஜியோவின் ரீசார்ஜ் திட்டம் பல உள்ளன. இது எந்த திட்டம் மற்றும் அதில் உங்களுக்கு என்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை இங்கே விரிவாக தெரிந்து கொள்ளலாம்.

நீங்கள் ஜியோ பயனராக இருந்தால், டேட்டா ஒன்லி பேக்குகள் மூலம் சிறந்த பலன்களைப் பெறலாம். இந்தத் திட்டங்களில், வெவ்வேறு  வேலிடிட்டி காலம் மற்றும் டேட்டாவின் பலன்களைப் பெறலாம். சிறந்த விஷயம் என்னவென்றால், இந்த திட்டங்களுக்கு நீங்கள் அதிகம் செலவிட வேண்டியதில்லை.

ஜியோ டேட்டா பேக்

ஜியோவின் டேட்டா பேக்கில் அழைப்பு மற்றும் எஸ்எம்எஸ் போன்ற எந்த நன்மையும் உங்களுக்கு கிடைக்காது. எனினும், இந்த திட்டங்களில் குறைந்த செலவில் அதிக டேட்டாவை மட்டுமே பெறுவீர்கள். ரிலையன்ஸ் ஜியோவின் (Reliance Jio) டேட்டா பேக்குகள் 30 நாட்கள், 28 நாட்கள், ஒரு நாள் மற்றும் 1 மணிநேரம் என பல வகையான வேலிடிட்டி காலங்களுடன் வருகிறது. உங்கள் தேவைக்கேற்ப டேட்டா பேக் எடுத்துக் கொள்ளலாம். சில திட்டங்களின் விவரங்களை இங்கே சொல்கிறோம்.

ரூ.359 டேட்டா பேக்

ரூ.359 டேட்டா பேக் திட்டத்தில் 30 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கும். ஒரு மாத வேலிடிட்டியுடன் 50 ஜிபி டேட்டாவைப் பயன்படுத்தலாம். இதில் அதிவேக இன்டர்நெட் பயன்படுத்த வாய்ப்பு கிடைக்கும். உங்கள் ஆக்டிவ ஆக உள்ள அழைப்பு மேற்கொள்வதற்கானத் திட்டத்திலும் இந்தத் திட்டத்தைச் இணைக்கலாம்.

ரூ.289 டேட்டா பேக்

ரூ.289 டேட்டா பேக் திட்டம் ஒரு மாத வேலிடிட்டியுடன் வருகிறது. இதில் 40 ஜிபி டேட்டா இலவசமாக கிடைக்கும். இந்த திட்டம் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். ரூ.219 திட்டத்தில் கூட 30 நாட்கள் வேலிடிட்டி கொண்டது மற்றும் 30 ஜிபி டேட்டா இலவசம்.

ரூ.175 டேட்டா பேக்

நீங்கள் 28 நாட்கள், ஒரு நாள் அல்லது மணிநேரத்திற்கு டேட்டா பேக்கை எடுக்க விரும்பினால், அதற்கான திட்டங்களும் உள்ளன.
ரூ.175 திட்டமானது 28 நாட்கள் வேலிடிட்டி மற்றும் 10 ஜிபி டேட்டாவை வழங்குகிறது. இது தவிர, 10க்கும் மேற்பட்ட OTT இயங்குதளங்களின் சந்தாவும் இந்த திட்டத்தில் இலவசமாகக் கிடைக்கிறது. இதில் ஜியோ சினிமா, ZEE5, ஜியோ டிவி மற்றும் சோனி லிவ் ஆகியவை அடங்கும்.

ரூ.49 டேட்டா பேக்

அதேசமயம் ரூ.49 டேட்டா பேக் ஒரு நாள் செல்லுபடியாகும் ஆனால் இதில் வரம்பற்ற டேட்டாவின் பலனைப் பெறுவீர்கள். நீங்கள் விரும்பினால், நீங்கள் 2 நாட்கள், ஒரு நாள் மற்றும் ஒரு மணிநேரம் செல்லுபடியாகும் திட்டங்களையும் எடுக்கலாம்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.