நடிகர் அஜித் நடிப்பில், மகிழ் திருமேனி இயக்கத்தில் வெளியாகவிருக்கும் விடாமுயற்சி திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகியிருக்கிறது.
லைகா தயாரித்துள்ள இந்த திரைப்படத்தில் த்ரிஷா, ரெஜினா கசாண்ட்ரா, அர்ஜுன், ஆரவ் உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.
பொங்கலுக்கு முன்னதாகவே வெளியாகும் என அறிவிக்கப்பட்ட விடாமுயற்சி திரைப்படம் கடைசி நேரத்தில் தள்ளிப்போனதால் ரசிகர்கள் அதிருப்தி அடைந்தனர்.
இந்த நிலையில் இன்று வெளியான ட்ரெயிலரின் இறுதியில், விடாமுயற்சி திரைப்படம் வரும் பிப்ரவரி மாதம் 6ம் தேசி வெளியாகும் எனக் கூறப்பட்டுள்ளது.
சமீபத்தில் துபாய் 24H கார் பந்தையத்தில் பங்கேற்ற நடிகர் அஜித் குமார் இந்த ஆண்டு கார் பந்தைய சீசன் முடியும் வரை திரைப்படங்களில் நடிக்கப்போவதில்லை எனத் தெரிவித்திருக்கிறார்.
ஆனாலும் விடா முயற்சி, குட் பேட் அக்லி என இரண்டு திரைப்படங்கள் இந்த ஆண்டு வெளியாகவிருப்பதால் ரசிகர்கள் உற்சாகமாக உள்ளனர்.
கடைசியாக அஜித் குமாருக்கு 11 ஜனவரி, 2023 அன்று துணிவு திரைப்படம் வெளியானது. இரண்டு ஆண்டுகள் கழித்து வெளியாகவிருக்கும் விடாமுயற்சி திரைப்படத்துக்கு பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.