சென்னை,
அதிமுக நிறுவனத்தலைவரும், முன்னாள் முதல்-அமைச்சருமான எம்.ஜி.ஆரின் 108-வது பிறந்தநாள் இன்று தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி, எம்.ஜி.ஆரின் உருவப்படத்திற்கு அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் மரியாதை செலுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், எம்.ஜி.ஆர். பிறந்தநாளையொட்டி, அவருக்கும் புகழ் சேர்க்கும் விதமாக வீடியோ வெளியிட்டு பிரதமர் மோடி புகழாரம் சூட்டியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில்,
“எம்.ஜி.ஆரின் பிறந்தநாளில் அவருக்கு நான் மரியாதை செலுத்துகிறேன். ஏழைகளுக்கு அதிகாரம் அளித்து சிறந்த சமுதாயத்தை கட்டியெழுப்ப முயற்சித்தவர். மக்களுக்காக எம்.ஜி.ஆர். மேற்கொண்ட முயற்சிகளால் நாங்கள் பெரிதும் ஈர்க்கப்பட்டோம்.” என்று தெரிவித்துள்ளார்.