பிரயாக்ராஜ் திரிவேணி சங்கமத்தில் திருவள்ளுவர் சிலை அமைக்கிறது பாஜக அரசு

புதுடெல்லி: உ.பி.​யின் பிரயாக்​ராஜில் நாட்​டின் பல்வேறு மொழிகளை இணைக்​கும் பாலமாக பாஷா சங்கம் செயல்​படு​கிறது. இதன் சார்​பில் திரு​வள்​ளுவர், பாரதி​யார், பாரதி​தாசன் என பல தமிழ் கவிகளுக்கு விழா எடுக்​கப்​பட்​டுள்​ளது.

பாஷா சங்கத்​தின் நிறு​வனரும் மறைந்த பொதுச் செயலா​ள​ருமான கிருஷ்ணசந்த் கவுடு, தமிழ் கற்ற​தால் அவருக்கு திரு​வள்​ளுவர் மீது அதிக ஈடுபாடு வந்தது. இவர்​தான், முதன்​முதலில் 1990-ல் திரிவேணி சங்கமத்​தின் தென்கரை சாலைக்கு திரு​வள்​ளுவர் பெயரை சூட்டி, அங்கு அவருக்கு சிலை வைக்க கோரினார்.

2009-ல் தமிழர் எம்.கோ​விந்​த​ராஜன் பாஷா சங்க பொதுச் செயலாளர் ஆன பிறகு அவர் மேற்​கொண்ட முயற்சிகள் ‘இந்து தமிழ் திசை’ நாளிதழில் கடந்த 9 வருடங்​களாக வெளிவந்​துள்ளன. தற்போது பணி ஓய்வு பெற்ற எம்.கோ​விந்​த​ராஜன் இந்து தமிழ் திசை​யிடம் கூறுகை​யில் “கவுடுக்கு பிறகு நாங்கள் தொடர்ந்து வலியுறுத்​தி​ய​தால், அலகா​பாத் மாநக​ராட்சி நவம்பர் 11, 2011-ல் நடத்திய கூட்​டத்​தில் சாலை​யின் பெயர் மற்றும் சிலைக்கு அனுமதி வழங்​கியது. இந்த தகவல் தாமதமாக தெரிய​வந்​த​தால் மாநக​ராட்சி உத்தரவை 2017-ல் பெற்​றோம். 2017, ஜுலை 10-ல் திரு​வள்​ளுவர் பெயரை தென்கரை சாலைக்கு சூட்டி விழா நடத்​தினோம். ஆனால் அந்த இடம் தங்கள் கட்டுப்​பாட்டுக்​குள் வருவதாக கூறி அலகா​பாத் வளர்ச்சி ஆணையம், சிலை வைக்க தடை விதித்​தது. தற்போது தடைகளை விலக்கி உ.பி. அரசே சிலை வைக்​கிறது.

தடைகள் களையப்​படு​வதற்கு ‘இந்து தமிழ்’ வெளி​யிட்ட செய்தி​களும் உத்வேகம் அளித்​தது” என்றார். தற்போது உ.பி. அரசின் செலவில் மாமல்​லபுரத்​தில் வாங்​கப்​பட்ட சிலை, கடந்த ஜனவரி 12-ல் பிரயாக்​ராஜ் அனுப்பி வைக்​கப்​பட்​டுள்​ளது. பிரதமர் மோடி மகா கும்​பமேளா​வுக்கு வரும்​போது ​திரு​வள்​ளுவர் சிலையை ​திறந்​து வைப்​பார்​ என எ​திர்​பார்​க்​கப்​படுகிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.