2023-ம் ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கிய இஸ்ரேல் – பாலஸ்தீனப் போர், ‘போர் நிறுத்த ஒப்பந்தத்தின்’ மூலம் முடிவுக்கு வருவதாக அமெரிக்கா மற்றும் கத்தார் நேற்று முன்தினம் அறிவித்தது. இருந்தாலும், பணைய கைதிகளை விடுவிப்பதில் இரண்டு நாடுகளுக்கும் இடையே இழுப்பறிகள் தொடர்ந்துக்கொண்டிருந்தன.
இதுக்குறித்து வெள்ளிக்கிழமை (இன்று) பாதுகாப்பு சபை கூட்டப்பட்டு முடிவு எடுக்கப்படும் என்று இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு கூறியிருந்தார்.
இதுவரை நடந்த இஸ்ரேல் – பாலஸ்தீனப் போரில் பாலஸ்தீன போராளிகள் இஸ்ரேலை சேர்ந்த சிலரை சிறைபிடித்து வைத்திருந்தனர். இஸ்ரேலும் பல பாலஸ்தீனர்களை சிறையில் அடைத்து வைத்திருந்தது.
இவர்களை விடுவிப்பதில் தான் பெரிய சிக்கல் எழுந்து வந்தது. இதற்கு, தற்போது முற்றுப்புள்ளி வைத்துள்ளார் நெதன்யாகு. இன்று அவர் கூட்டிய பாதுகாப்பு சபையில் பணைய கைதிகளை விடுவிப்பதாக முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதை நெதன்யாகு அறிவித்துள்ளார். இதனையடுத்து, பாலஸ்தீனமும் அவர்கள் வைத்திருக்கும் பணைய கைதிகளை விடுவிப்பார்கள்.
இது அவ்வளவு எளிதாக நடக்கவில்லை. நேற்றுக்கூட, இஸ்ரேல் பாலஸ்தீனத்தின் மேல் நடத்திய வான்வழி தாக்குதலில் கிட்டதட்ட 72 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த கடைசி நிமிட தாக்குதலுக்கு பின், இதை காரணம் காட்டி இஸ்ரேல் ஒப்பந்தத்தில் இருந்து பின்வாங்க முயன்றது. இந்த நிலையில், ‘இஸ்ரேல் – பாலஸ்தீன போர் நிறுத்த ஒப்பந்தம் செயல்பாட்டிற்கு வருமா?’ என்ற எழுந்த சந்தேகத்திற்கு பதில் அளித்துள்ளார் நெதன்யாகு.
இந்தப் போர் நிறுத்தத்தை ஹமாஸ் அமைப்பின் மூத்த அதிகாரி ஒருவரும் உறுதி செய்துள்ளார்.