Madha Gaja Raja: "அவ்வளவு உடல் நல பிரச்னைகளிலும் நான்…" – விஷால் உருக்கம்

சுந்தர்.சி இயக்கத்தில் விஷால், சந்தானம், அஞ்சலி, வரலட்சுமி… என பல ஸ்டார் காஸ்ட்டுடன் உருவான ‘மதகஜராஜா’ திரைப்படம் 12 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தப் பொங்கலுக்கு வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது.

இந்நிலையில் இத்திரைப்படத்தின் வெற்றி விழா இன்று சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில் இயக்குநர் சுந்தர்.சி, விஷால், விஜய் ஆண்டனி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர். இதில் தனது உடல் நல பிரச்னைகள் குறித்து நெகிழ்ச்சியுடன் பேசியிருக்கிறார் விஷால்.

சுந்தர்.சி, விஷால்

இது குறித்துப் பேசியிருக்கும் விஷால், ” ‘விஷால இப்படி பார்த்ததேயில்லை, என்ன ஆச்சு’ என நிறைய பேர் எனக்காக கண்ணீர் விட்டு அழுதார்கள். என்னோட உடல் நிலை குறித்து நிறைய பேர் நலம் விசாரிச்சாங்க. பூ விற்கிற அம்மா, தூய்மையாளர் அம்மா என நிறைய அன்புள்ளங்கள் நான் நல்ல இருக்கனும்னு உண்மையா நலம் விசாரிச்சாங்க. இப்படிப்பட்ட நல்ல உள்ளங்கள் எனக்குக் கிடைத்திருப்பதற்கு நான் புண்ணியம் செஞ்சிருக்கனும்.

அவ்வளவு உடல் நல பிரச்னைகளிலும் நான் அன்று பிரஸ்மீட்டிற்கு வந்ததற்குக் காரணம் சுந்தர் அண்ணம் மட்டும்தான். அவரும், நானும் இந்தப் படம் ரிலீஸாகனும்னு பல ஆண்டுகள் பேசியிருக்கிறோம். இப்போ அது நிஜமாகியிருக்கிறக்கிறது.

விஷால்

இவ்வளவு நாளுக்குப் பிறகு இப்படம் வெளியான போதும் தியேட்டரில் ரசிகர்கள் குவிந்தார்கள். இதெல்லாம் இறைவனின் அருள்தான். மனோ பிரசாத் சார் மாதிரியான தயாரிப்பாளர்கள் திரும்பவும் வந்து நிறைய படங்கள் தயாரிக்கனும். இப்போ இருக்க நிறைய தயாரிப்பாளர்கள் சரியாக ஜி.எஸ்.டி, வரிகள் கட்டுவதில்லை, சரியான சம்பளம் கொடுப்பதில்லை. நல்ல தயாரிப்பாளர்கள் நம்ம திரைத்துறைக்கு வேண்டும். நிறைய நல்ல இயக்குநர்கள் திரைப்படங்களைத் தயாரிக்கனும்” என்று பேசியிருக்கிறார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.