Rinku Singh: ரின்கு சிங்கிற்கு டும் டும் டும்…? கல்யாணப் பொண்ணு யாரு தெரியுமா?

Rinku Singh Engagement Latest Updates: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான சிட்னி டெஸ்ட் போட்டிக்கு பிறகு இந்திய ஆடவர் சீனியர் அணிக்கு நீண்ட ஓய்வு வழங்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், விஜய் ஹசாரே கோப்பை தொடர் தற்போது இறுதிக்கட்டத்தை நெருங்கி உள்ளது. இறுதிப்போட்டியில் கர்நாடகா – விதர்பா அணிகள் நாளை பலப்பரீட்சையில் ஈடுபடுகின்றன. 

விஜய் ஹசாரே கோப்பை தொடர் நிறைவடைந்த உடன் ஒருபக்கம் ரஞ்சி டிராபி தொடரும், இந்தியா – இங்கிலாந்து டி20 தொடரும் தொடங்குகின்றன. ஜன. 22ஆம் தேதி 5 போட்டிகள் இந்த டி20 தொடர் தொடங்க இருக்கிறது. ஜன. 22, 25, 28, 31, பிப்.2 ஆகிய நாள்களில் நடைபெறுகிறது. அதன்பின் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் பிப். 6, 9, 12 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது.

இந்தியா – இங்கிலாந்து தொடர்

அந்த வகையில், டி20 தொடருக்கு மட்டுமே இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. மறுபுறம் ஒருநாள் தொடருக்கும், சாம்பியன்ஸ் டிராபி தொடருக்குமான இந்திய அணி நாளை அல்லது நாளை மறுநாளுக்குள் அறிவிக்கப்படலாம் என கூறப்படுகிறது. பிசிசிஐ வீரர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இந்திய அணி தற்போது பல்வேறு மாற்றத்திற்கு ஆளாகி வந்தாலும், டி20, ஒருநாள், டெஸ்ட் ஆகியவற்றில் சில வீரர்களுக்கான இடம் மட்டும் நிலையான ஒன்றாக உள்ளது.

அசைக்க முடியாதவர் ரின்கு சிங்

அதில், டி20 ஸ்குவாடில் ரின்கு சிங்கின் இடத்திற்கு வரும் 2026 டி20 உலகக் கோப்பை வரை எவ்வித பிரச்னையும் இல்லை எனலாம். ஐபிஎல் தொடர் மூலம் இந்திய அணி கண்டெடுத்த திறமையான வீரர்களில் ஒருவர்தான் ரின்கு சிங். 2023ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் குஜராஜ் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக கடைசி ஓவரில் 5 சிக்ஸர்களை பறக்கவிட்டதன் மூலம் பெரும் பிரபலமடைந்த ரின்கு சிங் துரதிருஷ்டவசமாக காம்பினேஷன் சிக்கலால் 2024 டி20 உலகக் கோப்பையில் விளையாட இயலாமல் போனது குறிப்பிடத்தக்கது.  

ரின்கு சிங்கிற்கு யாருடன் திருமணம்?

இந்நிலையில் ரின்கு சிங் குறித்த முக்கிய அப்டேட் ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது. ஆம், ரின்கு சிங்கிற்கு திருமண நிச்சயதார்த்தம் விரைவில் நடக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதாவது, சமாஜ்வாதி கட்சியின் மக்களவை உறுப்பினரான பிரியா சரோஜ் – ரின்கு சிங் ஆகியோர் திருமணம் செய்துகொள்ள இருப்பதாக கூறப்படுகிறது.

ரின்கு சிங் நிச்சயதார்த்தம் உண்மையில்லை 

ஆனால், இது தவறான தகவல் என பிரியா சரோஜ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் ஊடகம் ஒன்றில் பேசியபோது,”ரின்கு சிங்கின் குடும்பத்தினர், திருமணம் குறித்து எனது குடும்பத்தினரை அணுகியது உண்மைதான். குடும்பத்தினரும், நாங்களும் இதுகுறித்து தீவிரமாக ஆலோசித்து வருவதும் உண்மைதான். ஆனால், விரைவில் நிச்சயதார்த்தம் நடைபெற உள்ளது என்பது முற்றிலும் தவறான ஒன்று” என தெரிவித்துள்ளார்.

யார் இந்த பிரியா சரோஜ்?

பிரியா சரோஜ் கூறுவதை பார்த்தால் தற்போதைக்கு நிச்சயதார்த்தம் உறுதியாகவில்லை என்றும் எதிர்காலத்தில் இதுகுறித்த அறிவிப்பு வரலாம் என்றும் தெரிகிறது. 26 வயதான பிரியா சரோஜ், இளமையான மக்களவை உறுப்பினர்களுள் ஒருவர் ஆவார். 

உத்தர பிரதேசத்தின் ஜான்பூர் மாவட்டத்தில் உள்ள மச்சாலி ஷஹார் தொகுதியின் மக்களவை உறுப்பினராக கடந்த 2024 தேர்தலில் தேர்வானார். இவர் டெல்லி பல்கலைக்கழக்கத்தில் பயின்றுவிட்டு, தற்போது உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞராகவும் உள்ளார். இவரது தந்தை டூஃபானி சரோஜ், இதே மச்சாலி ஷஹார் மக்களவை தொகுதியில் 1999, 2004, 2009 ஆகிய மூன்று தேர்தல்களிலும் வெற்றி பெற்று எம்.பி.,யாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.