இயக்குநர் ராம், மிர்ச்சி சிவா கூட்டணியில் 'பறந்து வா' – ராமுடன் கைகோர்க்கும் இசையமைப்பாளர் யார்?

இயக்குநர் ராம் இயக்கத்தில் கடந்த 2019-ம் ஆண்டு `பேரன்பு’ திரைப்படம் வெளியாகியிருந்தது.

இத்திரைப்படத்திற்குப் பிறகு, நிவில் பாலி மற்றும் சூரியை வைத்து இயக்குநர் ராம், `ஏழு கடல் ஏழு மலை’ படத்தை இயக்கியிருக்கிறார்.

இந்தப் படத்துக்கு யுவன் இசையமைத்திருக்கிறார். இத்திரைப்படம் கடந்தாண்டு சர்வதேச ரோட்டர்டேம் திரைப்படம் விழாவில் திரையிடப்பட்டது. அங்கு இத்திரைப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்ததாகத் தகவல்கள் வெளியாகின.

இத்திரைப்படம் பிப்ரவரி மாதம் வெளியாகும் எனத் திரைப்படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி விகடனுக்கு அளித்த பேட்டியில் கூறியிருந்தார். இதனைத் தொடர்ந்து தன்னுடைய அடுத்த திரைப்படத்தையும் இயக்குநர் ராம் இயக்கி முடித்துவிட்டார். அத்திரைப்படத்திற்கு `பறந்து போ’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. இத்திரைப்படத்தில் கதாநாயகனாக மிர்ச்சி சிவா நடித்திருக்கிறார். கிரேஸ் ஆண்டனி, மிதுல் ரயான் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்திருக்கிறார்கள்.

Parandhu Va Movie Poster
Parandhu Va Movie Poster

டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் நிறுவனம் இத்திரைப்படத்தைத் தயாரித்திருக்கிறது. இத்திரைப்படத்திற்கு என்.கே. ஏகாம்பரம் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். வழக்கமாக இசைப் பணிகளுக்காக யுவன் சங்கர் ராஜாவுடன் கூட்டணி அமைக்கும் இயக்குநர் ராம், இத்திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் தயாநிதியுடன் இணைந்திருக்கிறார். இந்த திரைப்படமும் அடுத்த மாதம் நடைபெறவுள்ள ரோட்டர்டேம் திரைப்பட விழாவில் திரையிடப்படவுள்ளது.

நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்… புத்தம் புதிய விகடன் ப்ளே… உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்…

https://bit.ly/TATAStoryepi01

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.