"ஒரே நாளில் 8 இடங்களில் செயின் பறிப்பு; காவல்துறைக்கு முழு சுதந்திரம் வேண்டும்" – அண்ணாமலை காட்டம்

சென்னையில் ஒரே நாளில் எட்டு இடங்களில் செயின் பறிப்பு சம்பவங்கள் நடந்திருப்பதாகத் தெரிவித்திருக்கும் தமிழ்நாடு பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, காவல்துறைக்கு முழு சுதந்திரம் வழங்க வேண்டும் எனவும், காவல்துறையும் தி.மு.க-வின் அதிகார துஷ்பிரயோகங்களைப் புறக்கணித்துவிட்டு சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்கும் பணியில் ஈடுபடவேண்டும் எனவும் வலியுறுத்தியிருக்கிறார்.

எக்ஸ் தளத்தில் அண்ணாமலை, “சென்னை தாம்பரம் காவல் எல்லைக்குட்பட்ட சேலையூர், மணிமங்கலம், கூடுவாஞ்சேரி, மறைமலைநகர் உள்ளிட்ட எட்டு இடங்களில், ஒரே நாளில் செயின் பறிப்பு சம்பவங்கள் நடைபெற்றிருப்பது பெரும் அதிர்ச்சியையும், பொது மக்களிடையே அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக, சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் பணிபுரியும் பெண் காவலர், சீருடையில் இருக்கும்போதே அவரது கழுத்தில் இருந்த தாலிச் சங்கிலியைப் பறித்துக் கொண்டு சென்றிருக்கின்றனர்.

ஸ்டாலின், அண்ணாமலை
ஸ்டாலின், அண்ணாமலை

தி.மு.க அரசு, சமூக வலைத்தளத்தில் இயங்கும் பா.ஜ.க தொண்டர்களைப் பின்தொடர்வதையே காவல்துறையின் முழுநேரப் பணியாக மாற்றியதன் விளைவு, சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து, பெண் காவலரிடமே செயின் பறிப்புச் சம்பவம் நடக்கும் அளவுக்கு, தமிழக மக்கள் பாதுகாப்பைக் கேள்விக்குறியாக்கியிருக்கிறது.

தி.மு.க அரசு, இனியும் காவல்துறையினரை, அரசியல் பழிவாங்குதலுக்குப் பயன்படுத்துவதை விட்டுவிட்டு, சமூக விரோதிகளுக்கு எதிராக, காவல்துறையினருக்கு முழு சுதந்திரம் வழங்க வேண்டும். காவல்துறையினரும், தி.மு.க-வின் அதிகார துஷ்பிரயோகங்களைப் புறக்கணித்துவிட்டு, தங்கள் முதற் கடமையான சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்கும் பணியில் ஈடுபடவேண்டும் என்று வலியுறுத்துகிறேன்” என்று பதிவிட்டிருக்கிறார்.

VIKATAN PLAY – EXCLUSIVE AUDIO STORIES

நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்… புத்தம் புதிய விகடன் ப்ளே… உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்…

https://bit.ly/VaigainathiNaagarigam



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.