சென்னை: தடை செய்யப்பட்ட போதைப்பொருட்கள், கஞ்சா, செல்போன் போன்றவை, கடுமையான சோதனைகளை மீறி சிறைக்குள் எப்படி வருகிறது என கேள்வி எழுப்பிய சென்னை உயர்நீதிமன்றம், அதுகுறித்து அறிக்கை தாக்கல் செய்ய சிறைத்துறை டிஜிபி-க்கு உத்தரவிட்டுள்ளது. கொலை வழக்கில் கைதாகி புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பன்னா இஸ்மாயில் மற்றும் பிலால் மாலிக் ஆகியோர் சிறைத்துறை அதிகாரிகளால் கடுமையாக தாக்கப்பட்டதாகவும், அவர்களுக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க உத்தரவிடக்கோரி அவர்களது குடும்பத்தினர் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. […]