புதுடெல்லி: டெல்லியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட அரவிந்த் கேஜ்ரிவாலின் கார் மீது கற்கள் வீசப்பட்டது, இது பாஜகவின் திட்டமிட்ட தாக்குதல் என்றும் ஆம் ஆத்மி கட்சி குற்றம்சாட்டியுள்ளது.
டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கேஜ்ரிவால் இன்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, அவருக்கு கருப்புக்கொடி காட்ட ஒரு குழு முயன்றது. அந்தக் குழுவில் இருந்து கற்கள் வீசப்பட்டன. இது குறித்த வீடியோவை ஆம் ஆத்மி கட்சி வெளியிட்டுள்ளது. மேலும், இது பாஜகவின் திட்டமிட்ட தாக்குதல் என்றும் ஆம் ஆத்மி கட்சி கூறியுள்ளது.
हार के डर से बौखलाई BJP, अपने गुंडों से करवाया अरविंद केजरीवाल जी पर हमला
BJP प्रत्याशी प्रवेश वर्मा के गुंडों ने चुनाव प्रचार करते वक्त अरविंद केजरीवाल जी पर ईंट-पत्थर से हमला कर उन्हें चोट पहुंचाने की कोशिश की ताकि वो प्रचार ना कर सकें।
बीजेपी वालों, तुम्हारे इस कायराना… pic.twitter.com/QcanvqX8fB
— AAP (@AamAadmiParty) January 18, 2025
ஆம் ஆத்மிக்கு போட்டியாக பாஜக அதே சம்பவத்தின் மற்றொரு வீடியோவை வெளியிட்டுள்ளது. புதுடெல்லி தொகுதியில் கேஜ்ரிவாலை எதிர்த்துப் போட்டியிடும் பாஜக வேட்பாளர் பர்வேஷ் சாஹிப் சிங், வீடியோவை வெளியிட்டுள்ளார். மேலும் அவர், கேஜ்ரிவாலிடம் மக்கள் கேள்விகள் கேட்க முயன்றதாகவும், அப்போது கேஜ்ரிவாலின் வாகனம் இரண்டு இளைஞர்கள் மீது மோதியதாகவும், அவர்கள் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.
2 युवकों को तानाशाह से सवाल पूछना पड़ा भारी
दिल्ली चुनावों में हार सामने देख बौखलाया महाठग। सवाल पूछने पर 2 युवाओं को जोरदार टक्कर मारकर भागे, दोनों युवक को लेडी हार्डिंग हॉस्पिटल ले कर गए
केजरीवाल क्या तुम्हारे लिए लोगों की जान की कोई कोई कीमत नहीं है? pic.twitter.com/nEZVLoxzEv
— BJP Delhi (@BJP4Delhi) January 18, 2025
அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு இசட்-பிளஸ் பாதுகாப்பு உள்ளது. இதனிடையே, கேஜ்ரிவாலின் கார் மீது யாரும் கற்களை வீசவில்லை என்றும், ஆனால் சிலர் கருப்புக் கொடி காட்ட முயன்றனர் என்றும், உடனடியாக அவர்கள் அந்த இடத்திலிருந்து அகற்றப்பட்டனர் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர். ஆம் ஆத்மி தலைவர் ஒருவர், “பாஜகவின் புதுடெல்லி வேட்பாளர் பர்வேஷ்-ன் ஆதரவாளர்கள், தொகுதியில் பிரச்சாரம் செய்யும் போது கேஜ்ரிவாலைத் தாக்கினர்” என்று குற்றம்சாட்டியுள்ளார்.