திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சொர்க்க வாசல் தரிசனத்திற்கான இலவச டோக்கன் விநியோகம் நேற்றுடன் நிறைவடைந்தது.
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு கடந்த 10-ம் தேதி முதல் பக்தர்களுக்கு இலவச டோக்கன் வழங்கப்பட்டது. திருப்பதியில் 8 இடங்களிலும், திருமலையில் ஒரு இடத்திலும் டோக்கன் வழங்கப்பட்டது.
இந்நிலையில் கடந்த 8-ம் தேதி இரவு திருப்பதியில் டோக்கன் வழங்கும் மையம் ஒன்றில் கூட்ட நெரிசல் ஏற்பட்டதில் 6 பேர் உயிரிழந்தனர். 41 பேர் காயம் அடைந்தனர். இதையடுத்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் டோக்கன் விநியோகம் தொடங்கியது. இந்நிலையில் 19-ம் தேதி (நாளை) வரை சொர்க்க வாசல் தரிசனத்திற்கு இலவச டோக்கன் விநியோகம் நேற்று முடிந்துவிட்டதாக தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஏழுமலையானை வரும் 20-ம் தேதி தரிசனம் செய்ய 19-ம் தேதி சர்வ தரிசன டோக்கன் விநியோகம் செய்யப்படாது. ஸ்ரீவாணி அறக்கட்டளை டிக்கெட்டுகளும் 19-ம் தேதி வழங்கப்படாது. ஏழுமலையானை தரிசிக்க வேண்டுமெனில் பக்தர்கள் நேரடியாக சர்வ தரிசனத்தில் செல்லலாம். 20-ம் தேதி வரை சிபாரிசு கடிதங்கள் ஏற்கப்படாது” என்று கூறப்பட்டுள்ளது.