பிரயாக்ராஜில் தலையில் புறா, முள்படுக்கையுடன் மகா கும்பமேளாவில் பக்தர்களை கவரும் பாபாக்கள்

புதுடெல்லி: உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்​ராஜில், கடந்த 13-ம் தேதி மகா கும்​பமேளா தொடங்கி நடைபெற்று வருகிறது. 45 நாட்கள் நடைபெறும் இந்த மகா கும்​பமேளா​வில் கோடிக்​கணக்கான மக்கள் வந்து செல்​கின்​றனர். இங்கு துறவி​களுக்காக உள்ள 13 வகை அகாடாக்கள் இங்கு முகாமிட்டு கல்பவாசம் செய்​கின்​றனர்.

அகாடாக்​களில் உள்ள துறவி​களின் செயல்கள் பக்தர்களை கவரும் வகையில் உள்ளன. மகா கும்​பமேளா​வில் பங்கேற்றுள்ள துறவி​களில் ஒருவர் பெயர் புறா பாபா. இவரது தலையில் எந்நேர​மும் ஒரு புறா அமர்ந்​துள்ளது.

இதுகுறித்து புறா பாபா என்று அழைக்​கபடும் துறவி ராஜ்புரி மகராஜ் கூறுகை​யில், “எனது தலையில் இந்த புறா கடந்த 9 ஆண்டு​களாக அமர்ந்​துள்ளது. ஹரிபுரி எனும் இந்த புறா 24 மணி நேரமும் என்னை பிரி​யாமல் இருக்​கிறது. நான் கடந்த 3 ஆண்டு​களாக ஹரிபுரி​யுடன் கும்​பமேளா​வுக்கு வந்து புனித நீராடு​கிறேன்” என்றார்.

மற்றொரு துறவி ரமேஷ் குமார் மாஞ்சி ‘காட்​டேவாலா பாபா (முள் பாபா)’ என்பவரும் பக்தர்​களின் கவனத்தை கவர்ந்து வருகிறார். இவர் தனது முகாம் முன்பாக முட்களை கொட்டி அதன் மீது படுத்து தவம் செய்​கிறார். இந்த காட்​சியை கும்​பமேளா வரும் பக்தர்கள் கண்டு வியப்​படைகின்​றனர். உள்ளூர் செய்தி சேனலின் நிருபர் ஒருவர், வீடியோ கேமரா​வுடன் சென்று ‘இந்த முட்கள் உண்மை​யானவை​யா?’ என்று கேட்டு​விட்​டார். அதை கேட்ட முள் பாபா, நிருபரின் கன்னத்​தில் அறைந்​து​விட்​டார்.

அவரது சட்டையை பிடித்து இழுத்து, வா வந்து நீயே இந்த முள் படுக்கை​யில் படுத்து சோதித்​துக் கொள்” என்று கோபமாக கூறினார். அதை பார்த்த பக்தர்​கள், அந்த நிருபருக்கு பாபா​வின் ஆசி கிடைத்து​விட்​டதாக கிண்டல் செய்​தனர். அந்​தக் ​காட்​சிகளை ஒரு​வர் தன் செல்​போனில் ப​திவு செய்து சமூகவலை​தளத்​தில் வெளி​யிட்ட ப​திவு வைரலாகி வருகிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.