சென்னை: பரந்தூர் பசுமை விமான நிலைய எதிர்ப்பு குழுவினரை சந்திக்க பரந்தூர் செல்ல தவெக தலைவர் விஜய்க்கு காவல்துறை அனுமதி வழங்கி உள்ளது. அதன்படி வரும் திங்கட்கிழமை விஜய் பரந்தூர் செல்கிறார். பரந்தூர் பசுமை விமான நிலையத்துக்கு அந்த பகுதிகளைச் சேர்ந்த கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து 3 ஆண்டுகளாக போராடி வரும் நிலையில், மக்களின் எதிர்ப்பை மீறி அங்கு விமான நிலையம் அமைக்க தமிழ்நாடு அரசு முனைப்பு காட்டி வருவதுடன், நிலங்களை கையகப்படுத்தும் பணியையும் தொடங்கி […]