காரைக்குடி முன்னாள் மத்திய அமைச்சர் ப சிதம்பரம் திராவிடம் என்பது ஆரியர் அல்லாத ஒரு இனத்தை குறிப்பதாக கூறி உள்ளார். முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் காரைக்குடியில் செய்தியாளர்களிடம், ”ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத், அயோத்தியில் ராமர் கோவில் திறக்கப்பட்ட தினத்தை சுதந்திர தினம் என்று கூறுவதை கண்டிக்கிறோம். அவரது பேச்சு சுதந்திர போராட்ட தலைவர்களை இழிவுபடுத்தும் செயலாகும். வருகிற பட்ஜெட்டில் மத்திய அரசு பல விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும். மக்களின் நுகர்வு, வாங்கும் சக்தி […]