மெல்போர்ன்,
கிராண்ட்ஸ்லாம்’ என்ற உயரிய அந்தஸ்து பெற்ற ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்ன் நகரில் நடந்து வருகிறது. இதில் இன்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவின் 4வது சுற்று ஆட்டம் ஒன்றில் முன்னணி வீரரான கார்லஸ் அல்காரஸ் (ஸ்பெயின்) – பிரிட்டனின் ஜாக் டிராப்பர் உடன் மோதினார்.
இந்த ஆட்டத்தின் முதல் இரு செட்களை 7-5, 6-1 என்ற புள்ளிக்கணக்கில் கார்லஸ் அல்காரஸ் கைப்பற்றினார். தொடர்ந்து 3வது செட் தொடங்கும் முன்னர் ஜாக் டிராப்பர் காயம் காரணமாக போட்டியில் இருந்து வெளியேறினார். இதன் காரணமாக கார்லஸ் அல்காரஸ் காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
Related Tags :