நாம் தமிழர் கட்சிக்கு சுயமாக வரையப்பட்ட விவசாயி சின்னம்: இன்று அறிவிப்பு வெளியாகிறது

ஈரோடு: ஈரோடு கிழக்கு இடைத்​தேர்​தலில் போட்​டி​யிடும் நாம் தமிழர் கட்சி, தனக்கான தேர்தல் சின்னத்தை சுயமாக வரைந்து, தேர்தல் ஆணைய அங்கீ​காரத்​துக்காக வழங்​கி​யுள்​ளது.

2016-ல் மெழுகு​வர்த்தி சின்னத் ​தி​லும், 2019 முதல் 2021 வரை கரும்பு விவசாயி சின்னத்​தி​லும் தேர்தலை சந்தித்த நாம் தமிழர் கட்சிக்கு, 2024 மக்கள​வைத் தேர்​தலின்​போது உரிய நேரத்​தில் விண்​ணப்​பிக்கத் தவறிய​தால் கரும்பு விவசாயி சின்னம் பறிபோனது. இந்த சின்னம் கர்நாட​காவைச் சேர்ந்த ஒரு கட்சிக்கு ஒதுக்​கப்​பட்​டது. இதையடுத்து, தேர்தல் ஆணையம் வைத்​துள்ள சின்னங்கள் பட்டியலில் இருந்து மைக் சின்னத்தை தேர்வு செய்து நாம் தமிழர் கட்சி போட்​டி​யிட்​டது.

மக்கள​வைத் தேர்​தலில் 8.22 சதவீத வாக்​குகள் பெற்​றதன் மூலம் தேர்தல் ஆணையத்​தின் அங்கீ​காரத்தை நாம் தமிழர் கட்சி பெற்றுள்​ளது. ஈரோடு இடைத்​தேர்​தலில் அங்கீகரிக்​கப்​பட்ட கட்சியாக நாம் தமிழர் கட்சி முதல்​முறையாக களமிறங்​கு​கிறது.

இந்நிலை​யில், புலி சின்னம் கோரி தேர்தல் ஆணையத்​தில் மனு செய்​யப்​பட்​டது. ஆனால், உயிருடன் உள்ள விலங்​குகளை சின்னமாக ஒதுக்க முடி​யாது என்று தேர்தல் ஆணையம் தெரி​வித்​துள்ளது. மேலும், சின்னங்கள் பட்டியலில் இருந்து ஒரு சின்னத்தை தேர்வு செய்​ய​லாம் அல்லது தாங்​களாக ஒரு சின்னத்தை வரைந்து கொடுக்​கலாம் என்று தேர்தல் ஆணையம் தரப்​பில் தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.

இதுகுறித்து நாம் தமிழர் கட்சி நிர்​வாகிகள் கூறிய​தாவது: நாம் தமிழர் கட்சிக்கு புலி சின்னம் மறுக்​கப்​பட்ட நிலை​யில், சின்னங்கள் பட்டியலில் உள்ள கரும்பு விவசாயி சின்ன​மும் மறுக்​கப்​பட்​டுள்​ளது. வேறு மாநில இடைத்​தேர்​தலில் இந்த சின்னம் வேறு ஒருவருக்கு ஒதுக்​கப்​பட்​டதாக காரணம் கூறப்​பட்​டுள்​ளது.

எனவே, தேர்தல் ஆணைய விதி​முறை​களின்​படி, விவசாயி சின்னத்தை நாங்கள் வரைந்து, அதற்கு தேர்தல் ஆணைய ஒப்புதல் பெறவுள்​ளோம். இதற்காக பல்வேறு வகையான விவசாயி உருவப் படங்களை வரைந்​துள்ளோம். இவற்றில் 3 படங்களை அனுப்பி, தேர்தல் ஆணையம் ஒப்புதல் அளிக்​கும் படத்தை சின்னமாக இன்று (ஜன. 20) தலைமை ஒருங்​கிணைப்​பாளர் சீமான் அறிவிக்க உள்ளார். இவ்வாறு அவர்கள் தெரி​வித்​தனர்.

மேற்கு வங்கத்​தில் ​திரிணா​மூல் ​காங்​கிரஸ் தலை​வர் மம்தா பானர்ஜி, தனது கட்​சிக்கு இதேபோல சின்னத்தை வரைந்து ​கொடுத்து, தேர்​தல் ஆணைய அங்​கீ​காரம் பெற்றது குறிப்​பிடத்​தக்​கது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.