காசா: விடுதலை செய்யப்படும் இஸ்ரேல் பிணைக் கைதிகள் 3 பேரின் பெயரை ஹமாஸ் வெளியிட்டதை அடுத்து, காசாவில் நேற்று போர் நிறுத்த ஒப்பந்தம் அமலுக்கு வந்தது.
இஸ்ரேல் – ஹமாஸ் தீவிரவாதிகள் இடையே கடந்த ஓராண்டுக்கும் மேலாக நீடித்து வந்த போரில் பாலஸ் தீனர்கள் 47,000 பேர் உயிரிழந்தனர். இரு தரப்பு இடையே போர் நிறுத்தம் ஏற்படுத்த கத்தார், அமெரிக்கா சார்பில் பல கட்ட பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. பிணைக் கைதிகளை விடுவித்தால் போரை நிறுத்துவதாக இஸ்ரேல் நிபந்தனை விதித்தது.
இந்த நிலையில், பிணைக் கைதிகள் பட்டியலை ஹமாஸ் அனுப்பியதை தொடர்ந்து, நேற்று மதியம் 2.45 மணி முதல் காசாவில் போர் நிறுத்தம் அமலுக்கு வந்தது. இதையடுத்து, இஸ்ரேல் பிணைக் கைதிகள் 3 பேர் செஞ்சிலுவை சங்கம் மூலம் விரைவில் விடுவிக்கப்படுகின்றனர். இதையடுத்து, எஞ்சியுள்ள 98 இஸ்ரேல் பிணைக் கைதிகள் அடுத்தடுத்த கட்டங்களில் விடுவிக்கப்பட உள்ளனர்.