ஈரோடு கிழக்கு இடைத்​தேர்தல்: திமுக – நாம் தமிழர் கட்சி இடையே நேரடி போட்டி

ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்​தேர்​தலில் 8 சுயேச்சை வேட்​பாளர்கள் வேட்பு மனுக்களை திரும்பப்​பெற்ற நிலை​யில், திமுக மற்றும் நாம் தமிழர் கட்சி வேட்​பாளர்கள் உள்பட 47 பேர் போட்​டி​யிடு​கின்​றனர்.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்​தேர்​தலின் வாக்​குப்​ப​திவு பிப்​.5-ம் தேதி நடைபெற உள்ளது. திமுக வேட்​பாளர் சந்திரகு​மார், நாம் தமிழர் கட்சி வேட்​பாளர் சீதாலட்​சுமி உள்பட 58 வேட்​பாளர்கள் வேட்​புமனுக்​களைத் தாக்கல் செய்​னர். இதில், 3 வேட்​பாளர்​களின் வேட்​புமனுக்கள் நிராகரிக்​கப்​பட்டு, 55 வேட்​பாளர்கள் போட்​டி​யிடும் நிலை இருந்​தது.

8 பேர் திரும்பப் பெற்றனர்: இந்நிலை​யில் வேட்​புமனு திரும்​பப்​பெறும் காலம் நேற்று மாலை 3 மணியுடன் நிறைவு பெற்​றது. இதில் 7 சுயேச்சை வேட்​பாளர்கள் மற்றும் ஒரு பதிவு செய்​யப்​பட்ட கட்சி​யின் மாற்று வேட்​பாளர் என மொத்தம் 8 வேட்​பாளர்கள் வேட்​புமனுக்களை திரும்பப் பெற்றுள்​ளனர். அதன்படி திமுக மற்றும் நாம் தமிழர் கட்சி வேட்​பாளர்கள் உள்பட 47 வேட்​பாளர்கள் இறுதி செய்​யப்​பட்​டுள்​ளனர்.

இதைத்​தொடர்ந்து, ஈரோடு மாநக​ராட்சி அலுவல​கத்​தில் ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் நடத்​தும் அலுவலர் மணீஷ் தலைமை​யில் சின்னம் ஒதுக்​கும் பணி தொடங்​கியது. அதில், அங்கீகரிக்​கப்​பட்ட கட்சியான திமுக வேட்​பாளர் வி.சி.சந்​திரகு​மாருக்கு உதயசூரியன் சின்னம் ஒதுக்​கப்​பட்​டது.

தொடர்ந்து அண்மை​யில் அங்கீகரிக்​கப்​பட்ட அரசியல் கட்சியான நாம் தமிழர் கட்சி வேட்​பாளர் சீதாலட்​சுமி, கரும்பு விவசாயி சின்னம் அல்லது மைக் சின்னம் ஒதுக்​கீடு செய்ய கோரிக்கை வைத்​தார்.

நாதகவுக்கு ‘மைக்’ சின்னம்: இதில், கரும்பு விவசாயி சின்னம் வேறொரு அரசியல் கட்சிக்கு ஒதுக்​கீடு செய்யப்​பட்​டிருப்​ப​தால், மைக் சின்னம் ஒதுக்கு​வதாக தேர்தல் நடத்​தும் அலுவலர் தெரி​வித்​தார். அதனை வேட்​பாள​ரும் ஏற்றுக் கொண்​டார்.

இதனைத் தொடர்ந்து பதிவு செய்​யப்​பட்ட கட்சிகளின் வேட்​பாளர்கள் மற்றும் சுயேச்சை வேட்பாளர்களுக்கு சின்னம் ஒதுக்​கீடு செய்​யப்​பட்​டது. இதற்கிடையே, ‘இந்து தமிழ் திசை’​யிடம் நாம் தமிழர் கட்சி​யின் தலைமை ஒருங்​கிணைப்​பாளர் சீமான் கூறிய​தாவது தேர்தல் ஆணைய அங்கீ​காரம் பெற்ற கட்சி என்ற அடிப்​படை​யில் எங்கள் கொள்​கையை பிரதி​நி​தித்து​வப்​படுத்​தும் வகையில் விவசாயி சின்னத்தை ஒதுக்க கேட்​டோம். அந்த சின்னம் வேறு கட்சிக்கு ஒதுக்​கப்​பட்​டதாக தெரிவிக்​கப்​பட்​டது. இந்நிலை​யில், தேர்தல் ஆணைய விதி​முறை​களின்​படி, நாங்களே சுயமாக சின்னத்தை வரைந்து கொடுக்​கும் வாய்ப்பு இருந்​த​தால், மூன்று விதமான விவசாயி சின்னங்களை வரைந்து தேர்தல் ஆணையத்​திடம் சமர்ப்​பித்​தோம். ஆனால், இதுகுறித்து பரிசீலனை செய்து அறிவிக்க காலதாமதம் ஆகும் என ஆணையம் தரப்​பில் தெரிவிக்​கப்​பட்​டது.

இந்த நிலை​யில் ஏற்கெனவே நாங்கள் போட்​டி​யிட்ட ஒலிவாங்கி (மைக்) சின்னத்தை, ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்​தேர்​தலுக்கு மட்டும் பயன்​படுத்​திக் கொள்ள முடிவு செய்​துள்ளோம். 2026 சட்டசபை பொதுத்​தேர்​தலின்​போது விவசாயி சின்னத்தை பெற்று, அதனையே எங்​கள் கட்​சி​யின் நிரந்தர சின்னமாக பயன்​படுத்த ​முடிவு செய்​துள்ளோம். இவ்​வாறு அவர் தெரி​வித்​தார்​.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.