காதலனை கொன்ற பெண்ணுக்கு இன்று தண்டனை அறிவிப்பு

திருவனந்தபுரம்: கன்னி​யாகுமரி​யில் வசித்த கேரள பெண் கரீஷ்மா. இவர் கல்லூரி​யில் படிக்​கும்​போது திரு​வனந்​த​புரத்​தைச் சேர்ந்த ஷரோன் ராஜ் என்ற வாலிபரை காதலித்​தார். இந்நிலை​யில் கரீஷ்மாவுக்கு, ராணுவ அதிகாரி ஒருவருடன் திரு​மணம் நிச்​சய​மானது.

காதலன் ஷரோன் ராஜ் உடனான தொடர்பை துண்​டிக்க விரும்பிய கரீஸ்மா, அவரை கொலை செய்​வது​தான் பிரச்​சினையி​லிருந்து விடு​படு​வதற்கு ஒரே தீர்வு என முடிவு செய்​தார். அவருக்கு குளிர்​பானத்​தில் வலி நிவாரண மாத்​திரை, தூக்க மாத்​திரைகளை கலந்து கொடுத்​தும் பலன் அளிக்க​வில்லை.

கடந்த 2022-ம் ஆண்டு அக்டோபர் 14-ம் தேதி ஷரோன் ராஜை வீட்டுக்கு அழைத்த கரீஷ்மா அவருக்கு மூலிகை விஷங்களை கலந்து ஆயூர்வேத பானம் கொடுத்​தார். அதை குடித்த ஷரோன் ராஜின் உடல் உறுப்புகள் செயல் இழந்​து இறந்​தார்.

போலீஸ் விசா​ரணை​யில் கொலை குற்​றத்தை ஒப்புக் கொண்ட கரீஷ்மா ஓராண்டு சிறை தண்டனை அனுப​வித்து ஜாமீனில் வெளிவந்​தார். கேரளா​வின் நெய்​யா​ற்றின்கரை நீதி​மன்​றத்​தில் நடைபெற்ற இந்த வழக்​கில் கடந்த வெள்​ளிக்​கிழமை தீர்ப்​பளிக்​கப்​பட்​டது. அதில் கரீஷ்மாவை குற்​றவாளி என நீதிபதி அறிவித்​தார். அவருக்கான தண்டனை கடந்த சனிக்​கிழமை வழங்​கப்​படும் என முன்பு அறிவிக்​கப்​பட்​டது. பின்னர் இ​தில் ​மாற்​றம் செய்​யப்​பட்​டது. கரீஷ்​மாவுக்கான தண்​டனையை நீதிபதி இன்​று அறி​விக்கிறார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.