ஷின்-சானின் வீட்டை உருவாக்க ரூ.3.5 கோடி செலவு செய்த சீன ரசிகர்

அனிமேஷன் கதாபாத்திரங்களின் உண்மையான பிரியர் என்றால் ஷின்-சான் பெயரை நீங்கள் கேள்விப்படாமல் இருக்க முடியாது. சிறுவர்களின் மிக பிரியமான இந்த கதாபாத்திரத்துக்கு உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். ஷின்-சானின் பிரியர்கள் எவரும் சிவப்பு மற்றும் வெள்ளை செங்கற்களால் தனித்துவமாக கட்டப்பட்ட ஷின்னோசுகே நோஹாராவின் (ஷின்-சான்) சின்னமான வீட்டை எப்போதும் நினைவில் வைத்திருப்பர்.

ஷின்-சானின் தீவிர ரசிகரான 21 வயது ஷென் என்பவர் தற்போது அந்த வீட்டை ரூ.3.5 கோடி செலவில் புதுப்பித்துள்ளது சீனா மட்டுமின்றி உலகம் முழுவதும் பேசுபொருளாகியுள்ளது. கடந்த 2024 ஜூலை மாதம் கட்டுமானப் பணியை தொடங்கிய அவர் ஓராண்டுக்கும் மேலாக ஷின்-சான் வீட்டை புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டார். இந்த வீட்டை புதுப்பிப்பதற்கான ஒப்பந்தத்தை இறுதி செய்வதற்காக ஷாங்காய்க்கு ஐந்துக்கும் மேற்பட்ட முறை ஷென் பயணம் செய்துள்ளார்.

ஷென் தனது தாயின் நிதி ஆதரவினைக் கொண்டு 100 சதுர மீட்டர் பரப்பளவைக் கொண்ட ஷின்-சான் வீட்டுக்கு புத்துயிர் கொடுத்துள்ளார். இந்த வீடு தற்போது உலகம் முழுவதிலும் இருந்து அனிமேஷன் கதாபாத்திர ரசிகர்களை ஈர்க்கும் ஒரு பிரபலமான மற்றும் புகைப்படம் எடுத்துக் கொள்ளும் சுற்றுலா தலமாக மாறியுள்ளது.

ஷெனின் லட்சியம் இத்தோடு முடிந்துவிடவில்லை. ஃபுடாபா மழலையர் பள்ளியை உருவாக்குவதும், கசுகாபே நகரம் முழுவதையும் ஷின்-சான் நினைவாக மீட்டுருவாக்கம் செய்வதும் ஷென்னின் நீண்ட கால திட்டமாக உள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.