Kolkata Rape case: “நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்தாலும் மறுப்பு கிடையாது.." -குற்றவாளியின் தாய்

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம், கொல்கத்தாவில் பயிற்சி மருத்துவர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டது நாடு முழுவதும் அதிர்வலைகளை கிளப்பியது.

இது தொடர்பாக, சஞ்சய் ராய் என்பவர் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் நேற்று முன்தினம் கொல்கத்தா நீதிமன்றம், ‘சஞ்சய் ராய் குற்றவாளி’ என்று தீர்ப்பு அளித்தது.

இதுக்குறித்து சஞ்சய் ராயின் தாய், “நீதிமன்றம் சஞ்சய் ராயிற்கு தூக்கு தண்டனையை விதித்தாலும், எனக்கு எந்தவொரு மறுப்பும் கிடையாது. விதி என்று நினைத்து அழுதுக்கொள்வேன். ஒருவேளை, என்னுடைய மகனின் மீது சுமத்தியுள்ளது பொய் புகார் என்றால் எனக்கு உடல்நிலை சரியில்லை என்றாலும் நீதிமன்றத்திற்கு வந்திருப்பேன்.

விதி என்று அழுதுக்கொள்வேன்...
விதி என்று அழுதுக்கொள்வேன்…

எனக்கும் மூன்று மகள்கள் இருக்கிறார்கள். பாதிக்கப்பட்ட பெண்ணின் தாயின் வலியை நான் உணர்கிறேன். அந்தப் பெண்ணும் என்னுடைய மகளைப் போலத் தான்.

அவனுக்கு குடிப்பழக்கம் இருந்தது. ஆனால், அவன் பெண்களிடம் தவறாக நடந்துகொள்கிறான் என்று எந்தப் புகாரும் என் காதிற்கு வந்ததில்லை.

கடந்த சில ஆண்டுகளாக, சஞ்சய் எங்களுடன் இல்லை. அவ்வப்போது தான் பேசிக்கொள்வோம். அதனால், அவனைப் பற்றியும், அவனது தொடர்புகளை பற்றியும் எனக்கு முழுமையாக தெரியவில்லை. இந்த வழக்கில் சஞ்சய் மட்டும் சம்பந்தப்படவில்லை. இன்னும் சிலர் இருக்கிறார்கள் என்ற தகவல்கள் வருகின்றது. அவர்களும் யார் என்று கண்டுபிடிக்கப்பட வேண்டும்” என்று பேசியுள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.