கடந்த 1765 முதல் 1900 வரை காலனித்துவ இந்தியாவில் இருந்து இங்கிலாந்து 64.82 டிரில்லியன் டாலர் லாபம் பார்த்துள்ளதாக உரிமைகள் குழுவான ஆக்ஸ்பாம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து உரிமைகள் குழுவான ஆக்ஸ்பாம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: 1765 முதல் 1900 வரை காலனித்துவ இந்தியாவில் இருந்து இங்கிலாந்து 64.82 டிரில்லியர் டாலர் லாபம் பார்த்துள்ளது.
இந்த தொகையை கொண்டு பிரிட்டஷ் 50 பவுண்டு நோட்டுகள் மூலம் லண்டனில் கம்பளமாக விரித்தால் அந்த நகரை 4 முறை மூடலாம். மிகவும் பணக்கார பிரிட்டிஷ்கார்களில் 10 சதவீதம் பேர் இதிலிருந்து 33.8 டிரில்லயன் டாலர் சம்பாதித்துள்ளனர்.
இங்கிலாந்தில் புதிதான உருவான நடுத்தர வர்க்கத்தின் இதன்மூலம் இரண்டாவது மிகப் பெரிய பலனை அடைந்துள்ளனர். மொத்த வருமானத்தில் 52 சதவீதத்தை மிகவும் பணக்காரர்களில் 10 சதவீதம் பேர் பெற்றதை தொடர்ந்து, 32 சதவீத வருமானத்தை நடுத்தர வர்க்கத்தினர் பெற்றுள்ளனர்.
1750-ம் ஆண்டில் இந்திய துணைக் கண்டம் உலகளாவிய தொழில்துறை உற்பத்தியில் தோராயமாக 25 சதவீதத்தை கொண்டிருந்தது. ஆனால் 1900 காலகட்டத்தில் இது வெறும் 2 சதவீதமாகக் குறைந்தது, இதற்கு ஆசிய ஜவுளித் துறைக்கு எதிரான கடுமையான கட்டுப்பாடுகளே காரணம் ஆகும்.
காலனி நாடுகளில் தங்கள் ஆட்சியை வலுப்படுத்த டச்சு மற்றும் ஆங்கிலேய ஆட்சியாளர்கள் ஓபியம் போதைப்பொருள் வர்த்தகத்திலும் ஈடுபட்டனர். கிழக்கு இந்தியாவின் ஏழ்மையான பகுதிகளில் பாப்பி போதைப் பொருள் சாகுபடி செய்யப்பட்டு அதை சீனாவுக்கு ஏற்றுமதி செய்தனர். இது இறுதியில் ஓபியம் போருக்கு வழிவகுத்தது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.