குரோதி வருடத்தின் தை மாதத்தில் இருக்கிறோம் தை பிறந்தால் வழி பிறக்கும் என்பது பழமொழி. தை பிறந்ததும் சுபமுகூர்த்த நாள்களும் வரிசைகட்ட ஆரம்பிக்கும்.
அப்படி இந்தக் குரோதி வருடத்தின் அடுத்த மூன்று மாதங்களில் வரும் சுபமுகூர்த்த நாள்களை அறிந்துகொள்வோம். இந்த நாள்களில் சுபமுகூர்த்த வேளை எது என்பதையும் அறிந்துகொள்வோம். இந்த வேளையில் (பங்குனி மாதம் தவிர) பிற மாதங்களில் அனைத்து சுபநிகழ்ச்சிகளையும் மேற்கொள்ளலாம். சுபமுகூர்த்தத்தை கணிக்கும்போது சம்பந்தப்பட்ட மணமகன் அல்லது மணமகளுக்கு சந்திராஷ்டமம் இல்லாமல் இருப்பதை உறுதிப்படுத்திக்கொள்வது நல்லது.
தை மாத சுபமுகூர்த்த நாள்கள் மற்றும் நேரம்
26.1.25 ஞாயிற்றுக்கிழமை – காலை 7.30 மணி முதல்ல் 9 மணி வரை – கும்ப லக்னம்
27.1.25 திங்கட்கிழமை – காலை 6.00 மணி முதல் 7.30 மணிவரை – கும்பலக்னம்
31.1.25 வெள்ளிக்கிழமை – காலை 6.00 மணி முதல் 7.30 மணிவரை – கும்ப லக்னம்
2.2.25 ஞாயிற்றுக்கிழமை – காலை 6.00 மணி முதல் 7.30 மணி வரை – கும்ப லக்னம்
3.2.25 திங்கட்கிழமை – காலை 6.00 மணி முதல் 7.30 மணி வரை – கும்ப லக்னம்
10.2.25 – திங்கட்கிழமை காலை 6.00 மணி முதல் 7.30 மணி வரை – கும்பலக்னம்
மாசி மாத சுபமுகூர்த்த நாள்கள்
மாசி மாதத்தில் அதிகபட்சமாக 9 சுபமுகூர்த்த நாள்கள் வருகின்றன. அந்த நாள்கள் ம்ற்றும் நேரம் குறித்துக் காண்போம்.
16.2.25 – ஞாயிற்றுக்கிழமை – காலை 6.00 மணி முதல் 7.30 மணி வரை கும்ப லக்னம்
17.2.25 – திங்கள்கிழமை – காலை 6.00 வ் முதல் 7.30 மணி வரை கும்ப லக்னம்
19.2.25 – புதன் கிழமை – காலை 6.00 வ் முதல் 7.30 மணி வரை கும்ப லக்னம்
23.2.24 – ஞாயிற்றுக்கிழமை – காலை 6.00 மணி முதல் 7.30 மணி வரை மீன லக்னம்
2.3.25 – ஞாயிற்றுக்கிழமை – காலை 6.00 முதல் 7.00 மணி வரை மீன லக்னம்
3.3.25 – திங்கட்கிழமை – காலை 6.00 மணி முதல் 7.00 மணி வரை மீன லக்னம்
9.3.25 – ஞாயிற்றுக்கிழமை – காலை 9.00 மணி முதல் 10.30 மணி வரை மேஷ லக்னம்
10.3.25 – திங்கட்கிழமை – காலை 9.00 மணி முதல் 10.30 மணி வரை மேஷ லக்னம்
12.3.25 – புதன் கிழமை – காலை 4.30 மணி முதல் 6.00 மணி வரை கும்ப லக்னம்
பொதுவாக பங்குனி மாதத்தில் சிலர் திருமணம் செய்ய மாட்டார்கள். அதாவது சூரியன் கேந்திர ஸ்தானங்களான மிதுனம் (ஆனி), கன்னி (புரட்டாசி), தனுசு (மார்கழி), மீனம் (பங்குனி) மாதங்களில் திருமணங்களைத் தவிர்ப்பார்கள். ஆனால் ஒரு சில சமூகங்களில் பங்குனி மாதத்தில் திருமணம் செய்யும் வழக்கம் உண்டு. பங்குனி மாதத்தில் தெய்வத் திருமணங்கள் அனைத்து ஆலயங்களிலும் நடைபெறும் என்பதால் அந்தக் காலத்தில் திருமணம் செய்யலாம் என்பாரும் உண்டு. அந்த வகையில் பங்குனி மாத சுபமுகூர்த்த நாள்களையும் நேரத்தையும் காண்போம்.
16.3.25 – ஞாயிற்றுக்கிழமை – காலை 7.30 மணி முதல் 9.00 மணி வரை மேஷ லக்னம்
17.3.25 – திங்கட்கிழமை – காலை 9.00 மணி முதல் 10.30 மணி வரை ரிஷப லக்னம்
31.3.25 – திங்கட்கிழமை – காலை 6.30 மணி முதல் 7.00 மணி வரை மேஷ லக்னம்
4.4.25 – வெள்ளிக்கிழமை – காலை 7.30 மணி முதல் 9.00 மணி வரை ரிஷப லக்னம்
7.4.25 – திங்கட்கிழமை – காலை 6.30 மணி முதல் 7.30 மணி வரை மேஷ லக்னம்
9.4.25 – புதன்கிழமை – காலை 6.00 மணி முதல் 7.30 மணி வரை மேஷ லக்னம்
11.4.25 – வெள்ளிக்கிழமை – காலை 6.00 மணி முதல் 7.30 மணி வரை மேஷ லக்னம்