அடுத்தடுத்து எந்த ஊர்களில் இசைக்கச்சேரி நடைபெறும் என்ற அறிவிப்பை இளையராஜா அறிவித்திருக்கிறார்.
இளையராஜா படங்களுக்கு இசையமைப்பது குறைந்திருந்தாலும் இசைக்கச்சேரிகளை நடத்தி மக்களை மகிழ்வித்து வருகிறார். குறிப்பாக, சமீபத்தில் கூட பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருநெல்வேலி மாவட்டத்தில் இசைகச்சேரி நடத்தினார். ஆயிரக்கணக்கான மக்கள் இசைக்கச்சேரியை நேரில் பார்த்து மகிழ்ந்திருந்தனர்.
“நெல்லை மக்களின் அன்பும் ஆதரவும் என்னை மிகவும் உற்சாகப்படுத்தியது. நான் முன்பு பதிவிட்டது போல் எனது கச்சேரி ஒவ்வொரு ஊர்களிலும் கூடிய விரைவில் நடைபெறும். அடுத்து எந்த ஊர்..? என்று தனது எக்ஸ் தளத்தில் இளையராஜா பதிவிட்டிருந்தார்.
இந்நிலையில் அடுத்தடுத்து எந்த ஊர்களில் இசைக்கச்சேரி நடைபெறும் என்பதற்கான அறிவிப்பை இளையராஜா வெளியிட்டிருக்கிறார். ” சேலம், திண்டுக்கல், புதுக்கோட்டை, தூத்துக்குடி, வேலூர், கடலூர்… உங்களை எல்லாம் பார்க்க ஆவலோடு காத்திருக்கிறேன்!
தேதிகள் விரைவில் அறிவிக்கப்படும்” என அறிவித்திருக்கிறார். விரைவில் அவர் அறிவித்துள்ள மாவட்டங்களில் எந்த தேதிகளில் இசைக்கச்சேரி நடைபெறும் என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே அதிகரித்திருக்கிறது.