சென்னை: அண்ணாநகர் சிறுமியின் வாக்குமூல வீடியோ பொதுவெளியில் வெளியானது எப்படி? என காவல்துறையிடம் கேள்வி எழுப்பிய நீதிமன்றம், இதுகுறித்து சிறப்பு புலனாய்வு குழு விசாரிக்க நீதிபதிகள் உத்தரவிட்டு உள்ளனர். சென்னை அண்ணா நகரில் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானது குறித்து புகார் அளிக்கச் சென்ற அந்த சிறுமியின் பெற்றோரை பெண் காவல் ஆய்வாளர் உள்ளிட்ட போலீஸார் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பான வீடியோ வைலானது. இதுகுறித்து காவல்துறை முறையான நடவடிக்கை எடுக்காத […]