சென்னை: மாவட்டம் தோறும் கள ஆய்வுக்கு செல்லும் முதலமைச்சர் ஸ்டாலின், வரும் 27, 28ம் தேதி விழுப்புரத்துக்கு செல்கிறார். இதையொட்டி, முன்னேற்பாடு பணிகள் குறித்து அனைத்துத்துறை அதிகாரிகளுடன் ஆட்சியர் ஆலோசனை நடத்தினார். .தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின், மக்கள் நலத்திட்டங்கள் குறித்து நேரடியாக ஆய்வு செய்யும் வகையில், மாவட்டந்தோறும் களஆய்வு நடத்தி வளர்ச்சி திட்டபணிகள் குறித்து ஆய்வு செய்தும், முடிவுற்ற நலத்திட்ட பணிகளையும் தொடங்கி வைத்து வருகிறார். மேலும் புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும் வருகிறார். தற்போது […]