டி20 போட்டிகளில் ஆடுவது சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு தயாராவதை பாதிக்காது – பட்லர்

கொல்கத்தா,

பட்லர் தலைமையிலான இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆட உள்ளது. இதில் முதல் டி20 தொடர் நடைபெறுகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது டி20 போட்டி கொல்கத்தாவில் இன்று நடக்கிறது.

இதையொட்டி இரு அணி வீரர்களும் சில தினங்களாக தீவிர பயிற்சியில் ஈடுபட்டனர். இந்நிலையில், இந்தியாவுக்கு எதிரான டி20 போட்டிகளில் ஆடுவது சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு தயாராவதை பாதிக்காது என பட்லர் கூறியுள்ளார். நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த பட்லர் கூறியதாவது,

இந்தியாவுக்கு எதிரான டி20 தொடர் மிகப்பெரிய தொடராக இருக்கப்போகிறது. சொந்த மண்ணில் இந்திய அணி மிகவும் சிறப்பாக செயல்படும். அவர்களுக்கு எதிரான இந்த தொடரை ஆவலாக எதிர்நோக்கி காத்திருக்கிறேன். போட்டி அட்டவணை குறித்து பெரிதாக கவலையில்லை. இந்த டி20 தொடர் மிகவும் சுவாரசியமானதாக இருக்கப்போகிறது என நினைக்கிறேன்.

இந்திய அணிக்கு எதிராக சில ஒருநாள் போட்டிகளிலும் விளையாடவுள்ளோம். அந்த போட்டிகளுக்காகவும் ஆவலுடன் காத்திருக்கிறேன். அதிக அளவிலான டி20 போட்டிகளில் விளையாடுவது, இங்கிலாந்து அணி சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு தயாராவதை பாதிக்காது. இவ்வாறு அவர் கூறினார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.