சென்னை: பெரியார் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் வீட்டை முற்றுகையிட சென்ற பெரியாரிஸ்டுகள் கைது செய்யப்பட்டு உள்ளனர். முன்னதாக, வீட்டுக்குள் வரும் பெரியாரிஸ்டுகளை எதிர்கொள்ள நாம் தமிழர் கட்சி தொண்டர்களும் தடிகளுடன் தயாராக இருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதற்கிடையில் போராட்டக்காரர்களால் இசிஆர் சாலை கடுமையாக பாதிக்கப்பட்டது. வாகன நெரிசல் மற்றும் போராட்டம் காரணமாக அந்த பகுதி மக்களும், பணிக்கு சென்றவர்களும் கடுமையாக பாதிக்கப்பட்டனர். மக்கள் நடமாட்டம் அதிகம் […]