தயாரிப்பாளர் தில்ராஜு வீடு, அலுவலகங்களில் வருமான வரி அதிகாரிகள் தீவிர சோதனை

ஹைதராபாத்: வாரிசு பட தயாரிப்​பாளர் தில்​ராஜு​வின் வீடு மற்றும் அலுவல​கங்கள் என மொத்தம் 8 இடங்​களில் 55 வருமான வரித் துறை அதிகாரிகள் குழு​வினர் சோதனை​யில் ஈடுபட்​டுள்​ளனர்.

நடிகர் விஜய் நடித்த வாரிசு, ஷங்கர் இயக்​கத்​தில் ராம்​சரண் நடித்த கேம் சேஞ்​சர், நடிகர் வெங்​கடேஷ், ஐஸ்வர்யா ராஜேஷ், மீனாட்சி ஆகியோர் இணைந்து நடித்த ‘சங்​க​ராந்​திக்கு ஒஸ்தானு’ உள்ளிட்ட படங்​களின் தயாரிப்​பாள​ரும், தெலங்​கானா மாநில திரைப்பட மேம்​பாட்டுக் கழகத் தலைவருமான தில்​ராஜு​வின் வீடு மற்றும் அலுவல​கங்​களில் வருமான வரித்​துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்​றனர். வருமான வரித் துறை அதிகாரிகள் அடங்கிய 55 குழு​வினர், 8 இடங்​களில் ஒரே நேரத்​தில் சோதனை நடத்தி வருகின்​றனர்.

தில்​ராஜு​வின் சகோதரர் சிரிஷ் மற்றும் மகள் ஹன்ஷிதா ரெட்டி ஆகியோ​ருக்​குச் சொந்​தமான பஞ்சாரா ஹில்ஸ், ஜூப்ளி ஹில்ஸ், கொண்​டாப்​பூர் மற்றும் கச்சிபவுலி ஆகிய இடங்​களில் உள்ள வீடு​களி​லும் சோதனைகள் நடத்​தப்​பட்டு வருகின்றன. இதில் வருமான வரித் துறை அதிகாரிகள் பல்வேறு ஆவணங்களை ஆய்வு செய்து வருகின்​றனர்.

இதுவரை ரூ.3 கோடி மதிப்புள்ள நகைகள், ரூ. 26 கோடி ரொக்கம் ஆகியவை பறிமுதல் செய்​யப்​பட்​டுள்ளதாக தகவல்கள் வெளி​யாகி உள்ளன. மேலும், கணக்​கில் காட்​டப்​படாத ரூ. 200 கோடிக்​கும் அதிகமான சொத்​து​களின் ஆவணங்​களும் பறி​முதல் செய்​யப்​பட்​டுள்ள​தாகக் கூறப்​படுகிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.